பள்ளி கல்வித்துறையை கர்த்தர் துறையாக மாற்ற முயற்சி!!!.

ஜாதி அடையாளமாக மாணவர்கள் கையில் வண்ணக் கயிறு கட்டி வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை,

தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் வண்ண கயிறுகளில் கையில் கட்டியுள்ளனர்.

அவை சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் காவி நிறத்தில் உள்ளது.

அதேபோல் மோதிரம் அணிந்துள்ளனர் நெற்றியில் திலகமிட்டு உள்ளனர்.

தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என தங்களின் ஜாதி அடையாளத்தை காட்டுவதற்காக இவ்வாறு அணிந்துள்ளனர்.

இதனால் மாணவர்களிடையே மோதல் ஏற்படுகிறது என 2018 -IAS பயிற்சி அலுவலர்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர் .

எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இதுபோன்ற நடவடிக்கை உள்ள பள்ளிகளை அடையாளம் காண வேண்டும்.

இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கவேண்டும்.

ஜாதி அடையாளத்தை குறிக்கும் வகையிலான வண்ண கயிறுகளை மாணவர்கள் கட்ட அனுமதிக்க கூடாது. அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விவரங்களை
இணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும். என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கும்,
பள்ளி கல்வி துறைக்கும் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

1. சாதி ரீதியான உணர்வுகளை தூண்டும் படியான செயல்களில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அது குறித்து கண்காணிப்பு வேண்டும் என்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

2. பள்ளி மாணவர்களிடையே சாதிய உணர்வு மேலோங்கும் அதற்கு கயிறு மட்டும் காரணமாக அமைவது இல்லை பள்ளிகளில் கல்வி சேர்க்கைக்காக மாணவர்கள் சேர்க்கையின்போது சாதிகளை பதிய மாட்டோம் சாதி சான்றிதழ் கேட்க மாட்டோம் என்று புதிய அரசாணையை வெளியிடும் படி பள்ளி கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திட  வேண்டுகிறோம்.
3. அனைத்து வண்ணங்களிலும் சாதி சங்கங்களின் கொடிகள் இருக்கின்ற காரணத்தால்,
பக்தி பூர்வமாக கைகளில் கயிறு அணிந்து ,
கழுத்தில் ருத்ராட்சம்  இறைவனுடைய டாலர்கள் அணிந்து வரக்கூடிய மாணவர்களை, நெற்றியில் விபூதி அழிக்க சொல்வதும்,  கயிறுகளை அறுக்க சொல்வதும் நெற்றியிலிருந்து மத அடையாளங்களை அழிக்க சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.அப்படி பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இது மத ரீதியான பிரச்சனையாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

4.நெற்றியில் விபூதி திலகம் என்று குறிப்பிடக் கூடிய பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலையில் குல்லா முகத்தில் பர்தா,
கழுத்தில் சிலுவை
அணிந்து வரக் கூடிய மதத்தவர்கள் குறித்து சுற்றறிக்கையில் குறிப்பிடாதது ஏன்? என்ற கேள்வி எழுப்ப வைக்கிறது.

காரணம் மாணவர்களிடையே நீதிநெறி கதைகள் சொல்லாமல் சாதிவெறி உணர்வுகளை ஊட்டக்கூடிய ஆசிரியர்களாலும், ஒரு கட்சி நிலை சார் போடு மனதிலே எண்ணங்களை வைத்திருக்கக்கூடிய ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களாக பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆசிரியர் சங்கங்கள் கலைக்கப்பட வேண்டும் ;
தடை செய்யப்பட வேண்டும்.என்ற கோரிக்கையை இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் பள்ளி கல்வித் துறைக்கும் ,
தமிழக அரசுக்கு  முன் வைக்கின்றோம்.

5.தமிழ் தாய் வாழ்த்து தேசிய கீதம் மற்றும் உறுதிமொழி ஏற்பு போன்றவை தவிர்த்து பைபிள் வசனம் கூறுவது ஜெபம் செய்ய வைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட கூடிய பள்ளிகள் மீதும் அரசு பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய கன்னியாஸ்திரி பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு முன்வைக்கிறோம்.

தவறு செய்யக் கூடிய  மாணவனாகஆசிரியராக பள்ளி நிர்வாகம் என யாராக
இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட முழு ஆதரவை இந்து தமிழர் கட்சி வழங்கும்.

ஆதரிக்கும் அதேநேரத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில்” இந்து மத அடையாள அழிப்பை அழித்து கல்வித்துறையை கர்த்தர் துறையாக மாற்றுவதற்கு உரிய வேலையை செய்கிறார்களோ என்று அச்சப்பட வைக்கிறது.”

ஆன்மீகத்தில் மீது நம்பிக்கை கொண்டு நடைபெற்று வரக்கூடிய ஆட்சியில் இந்து மத அடையாள அழிப்பு நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறையில் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்
பல வண்ணங்களில் மந்திரிகள் பலகயிறு கட்டும் போது, மாணவர்கள் கயிறு கட்ட தடை விதிப்பது பல கேள்விகளை எழுப்ப காரணமாக அமைகிறது.

“நீக்கப்பட வேண்டியது
கை, கழுத்துகளில் அணிந்து இருக்கக்கூடிய சாதி வண்ணக்கயிறுகள் அல்ல;நெஞ்சில் நஞ்சாக படிந்திருக்கும்
சாதிய எண்ண சுவடுகளை தான்”

இராம. இரவிக்குமார் நிறுவன தலைவர் இந்து தமிழர் கட்சி

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*