“வாடகை வாய் வியாபாரி” சுகிசிவம் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு!

அத்தி வரதப்பா
புத்தி வராதப்பா” என்று தொடங்கி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் உள்ள சாமிகளுக்கு எல்லாம் இல்லாத சக்தி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அத்திவரதருக்கு இருக்கிறதா?

கடவுள் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பாரா? அப்படி நினைத்தால் அவர் கடவுளா?

நீ உண்மையாக இருந்தால் கடவுள் உன் தேடி வருவார் உன் வீடு தேடி வருவார்.

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எல்லாம் கஷ்டப்பட்டு அத்திவரதர் தரிசிக்க வேண்டுமா? என்று அதிமேதாவித்
தனமாக பேசியிருக்கிறார்.

இந்த முட்டாள் ஜனங்களும்
இவருடைய பேச்சுக்கு கை தட்டியே இருக்கிறார்கள்.

ஆன்மீகப் பேச்சாளர் என்ற போர்வையில் இனிப்பு கலந்த நஞ்சை தன்னுடைய பேச்சினூடே புகுத்தக்கூடிய “சாக்கிய பௌத்த கைக்கூலியாக” கூட இந்த சுகிசிவம் இருக்கலாம்.

தத்துவார்த்த பொருட்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற வழிபாட்டு முறை ஒருபுறம் இருந்தாலும், மக்கள் நம்புகிறார்கள் அதை கேள்வி கேட்பதற்கு இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

(நான் வணங்கும் நம்பிக்கை பொருளை விமர்சிக்கும் போது அவனுக்கு மரியாதை கிடையாது)

முருகனையும் சுப்பிரமணியரையும் பிரித்து தமிழ் வேறு சமஸ்கிருதம் வேறு தமிழருடைய தெய்வம் வேறு வடவர் தெய்வம் வேறு என்று திரிபு வாதத்தை சமீபத்தில் பேசியிருக்கிறார்.

எந்த நாட்டிலும்இல்லாத சிறப்புத்தன்மை பாரதத்தில் தான் இருக்கிறது.

” கடவுள் மனிதனாக மனிதனே கடவுளாக இந்த மண்ணில்தான் அவதரித்தான். என்ற அடிப்படை அறிவு கூட இல்லை.

ராமன் கடவுள் தான் அவன் காட்டிற்கு ஏன் செல்ல வேண்டும்?

மன்னனாகஇருந்த
ராமன் ஏன் கடுமையான துயரத்திற்கு ஆளாக வேண்டும்?
என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.

காரணம் உலகியல் வாழ்க்கையை; வாழ்வியல் தத்துவங்களை மக்களுக்கு சொல்வதற்காகத்
தான் புராணங்கள்,
இதிகாசங்கள் எல்லாம் இருக்கிறது.

இதை வைத்து தனக்கு இருக்கும் பேச்சுத் திறமையை வைத்து இதுநாள் வரைக்கும் படித்து பேசி பிழைத்து கொண்டிருக்கும் இதுபோன்ற

“வாடகை வாய் வியாபாரிகள்”
இந்து சமய நம்பிக்கைகளை மட்டும் தானே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் .

பிற மதத்தவர்கள் நம்பிக்கையை இவர்கள் விமர்சித்து உயிரோடு இருந்து விட முடியுமா?

நமது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெருமாள் கோவில்களில் இல்லாத சக்தி இந்த அத்திவரதருக்கு மட்டும் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்புகிறார்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன்
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்கின்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது.

பத்து மாதம் கருவிலிருந்து ஒருதுளி உயிரணு உருவமாக வெளிவருகின்ற பொழுது அடைகின்ற மகிழ்ச்சியும் எங்கள் அத்திவரதன் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வருகின்ற மகிழ்ச்சியும் ஒன்றுதான்.

நாட்டில் இத்தனை பிரச்சனைகள் இல்லாத மரியாதை வந்த குழந்தைக்கு இருக்கிறதா என்று கேள்வி கேட்பார்போல !

எங்கள்நம்பிக்கையை இந்து மத உணர்வை வழிபாட்டுநெறியை
இந்த வாடகை வியாபாரிகள் விமர்சிக்க வேண்டாம்.

இவர் உண்மையிலேயே தத்துவார்த்த பொருளை பேசக்கூடிய ஒரு நபராக இருந்தால் “கன்னி மரியாளுக்கு எப்படியடா இயேசு பிறந்தார்?என்று
ஒரு கூட்டத்தில் இவர் கேட்பாரா?
அப்படி அவர் கேட்பாரேயானால் அவருக்கானமேடை இந்து தமிழர் கட்சி அமைத்துக் கொடுக்கும்.
( பிற மதத்தை விமர்சிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல கருத்து சுதந்திரம்)

பிற மத நம்பிக்கைகளைக் கேள்வி கேட்க திராணியற்ற,
இந்த பேடி இந்துமத தெய்வங்களை நிந்தனை செய்து இருக்கிறார்.

கங்கை போல் வரும் பேச்சில் கூவத்தை கலக்க வேண்டாம்.
படைப்புக் கடவுள் பிரம்மனே அடுத்த பிறவியில் சுகி.சிவத்தை
ஊமையாக படைத்திடு!

இதற்கு இந்த சுகிசிவம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையென்றால் பொதுவெளியில் பேசுகின்ற பொழுது இந்துக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

இராம. இரவிக்குமார் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்
86430-81430
96553-65696

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*