மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது.
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் அந்த 75 வயது மூதாட்டி, வயிற்றுப் பிழைப்புக்காக தான் கற்ற சிலம்பக் கலையை வைத்து பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார் உள்ளார்.
சாலையோரம் நின்று தனது இரு கைகளினாலும் சிலம்பம் சுற்றி தன்னுடைய அசத்தலான திறமையை வெளிப்படுத்தி வருகிறார் அந்த 75 வயது மூதாட்டி.
திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழி விட்டு நிற்கிறது.