Saturday, August 15, 2020

சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விரக்தியில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

பாக்யராஜ் வெளியிட்ட சர்கார் கதை

“கதைநாயகன்” அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர். தமிழர். ஒரு பெரிய மல்டி நேஷனல் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பவர். அப்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வருகிறார் “கதைநாயகன்”.

ஆர்வத்துடன் ஓட்டுப் போட வந்த “கதைநாயகனுக்கு” பெரும் ஏமாற்றம். கையில் அடையாள அட்டை வைத்திருந்தும் அவருடைய ஓட்டை அவருக்கு முன்பாகவே யாரோ ஒரு இந்தியனோ, தமிழனோ போட்டுவிட்டு போய்விட்டான். இதனால் கோபப்படுகிறார் “கதைநாயகன்”. அதிகாரிகளிடம் சண்டையிடுகிறார். ஆனாலும் ஓட்டளிக்க முடியவில்லை.

இதனால் கோபமடையும் இவர் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். போராடுகிறார். அந்தத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. இடையில் அத்தேர்தல் ரத்தானதால் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார் “கதைநாயகன்”.
“தேர்தலில் நிற்பதும், பிரச்சாரம் செய்வதும், செலவு செய்வதும் எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா. இப்போ போட்ட காசெல்லாம் போச்சு.. யார் தருவா.. உனக்கு அரசியலை பத்தி என்ன தெரியும்..? என்று அவர்களெல்லாம் “கதைநாயகனின்” தன்மானத்தைச் சீண்டிவிட.. இப்போது “கதைநாயகன்” அதே தொகுதியில் துணிச்சலாக சுயேட்சையாக நிற்க முடிவெடுக்கிறார். இதுதான் இடைவேளை போர்ஷன் என்கிறார்கள்.

இதற்குப் பின் அதே தொகுதியில் தேர்தல் பிரச்சாரம். “கதைநாயகனை ” தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்கும் சூழ்ச்சிகள். எதிர்ப்புகள்.. அடிதடி… கலாட்டா.. இது எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு களத்தில் நின்று வெற்றியும் பெற்று விடுகிறார் “கதைநாயகன்”.

அதிசயத்திலும் அதிசயமாக தமிழக சட்டமன்றத்தில் அப்போது தொங்கு சட்டசபை உருவாகிவிடுகிறது. ஒரேயொரு உறுப்பினர் ஆதரவு இருந்தால்தான் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலைமை. இப்போது அந்த ஒரேயொரு சுயேட்சை உறுப்பினர் சாட்சாத் நம்ம கதைநாயகன் தான் .

கதைநாயகனிடம் இரு தரப்பினரும் ஆதரவு கேட்கிறார்கள். எப்படியாவது நம்ம கட்சி ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் இரு கட்சியினருமே “கதைநாயகனையே” முதல்வராக்கவும் சம்மதம் கொடுக்கிறார்கள். “ “கதைநாயகன்” முதல்வரானால் போதும். நாங்கள் அவருக்குக் கீழ் அமைச்சர்களாக இருந்து கொள்கிறோம்…” என்று இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிவிடுகிறார்கள்.

ஆனால் “கதைநாயகன்” கடைசி டிவிஸ்ட்டாக “நான் மக்களுக்கு நல்லது செய்யணும்ன்னு நினைச்சுத்தான் இந்தத் தேர்தலில் நின்றேன். முதலமைச்சராகணும் என்று நினைக்கவில்லை. இப்போது முதல்வராக ஆனேன் என்றால் என்னால் உங்களை வைத்துக் கொண்டு நல்லது செய்ய முடியாது. அதனால் நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன். அப்போதுதான் இந்த ஆட்சியின் குற்றம், குறைகளைச் சொல்லி திருத்த முடியும். ஆகவே, நல்லதொரு எதிர்க்கட்சி உறுப்பினராக எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்…” என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.

நன்றி.சுபம்.

Latest Posts

ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகள் வரவேற்பு!!

ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னை காமராஜர் சாலையில் சோதனையின் அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது சென்னை போக்குவரத்து துறை. தமிழகத்தின் தலைநகரான...

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

Don't Miss

விமானத்தில் ஒலித்த தமிழ் குரல், அசத்தும் சென்னை ராயபுரம் பைலட் ப்ரியாவிக்னேஷ்..!

விமானத்தில் தகவல்களை தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார் நமது ராயபுரத்தை சேர்ந்த ப்ரியாவிக்னேஷ். சென்னையில்...

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...