திருமாவளவனும்,வேல்முருகனும் இந்து சமுதாயத்தை பிளக்க வந்த இரு கோடரிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீனாட்சிபுரம் இஸ்லாமிய மதமாற்றம் குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இவர் இந்த ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து “முனைவர்” பட்டம் பெற்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

சனாதன இந்து மதம் தலித்துகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அதிலிருந்து சமூக விடுதலைபெற
வேண்டுமென்றால் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது தான் தீர்வு என்ற அடிப்படையில் அவருடைய ஆய்வு அமைந்திருக்கிறது.

கோவை குண்டுவெடிப்பு கைதி அப்துல் நாசர் மதானி பெங்களூரில் இருந்த பொழுது திருமாவளவன் என்று சந்தித்தாரோ  அன்றுதான் இந்த ஆய்வுக் கட்டுரைக்கான ஆரம்ப குறியீடு தொடங்கியது.

1981 திருநெல்வேலி மாவட்டம்மீனாட்சி
புரம் மதமாற்றம் சம்பவம் நாடு முழுக்க ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது உண்மைதான்.
அப்பொழுது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடுப்பி பெஜாவர்  சுவாமிகள்,
மதுரை ஆதீனம், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், விஸ்வ ஹிந்து பரிசத் தலைவர் வேதாந்தம் உள்ளிட்ட பெயர் விடுபட்டு போன பல இந்து தலைவர்கள் அந்த கிராமத்திற்கு சென்றார்கள்.
மதமாற்ற தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

நிலவியல் ரீதியாக வட மாவட்டங்களில்  பிறந்த திரு தொல் திருமாவளவன் அவர்கள் மீனாட்சிபுரம் இஸ்லாமிய மதமாற்றம் குறித்து ஆய்வு கட்டுரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

திரு தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே “இந்து பெயர்களை மாற்றுவோம் தமிழ் பெயர்களை சூட்டுவோம் ” என்று நிகழ்ச்சிகளெல்லாம் நடத்தி,
இந்துவாக இருக்கக்கூடியவர்கள்  பெயர்களை மட்டும்தான் மாற்றினார்.

இஸ்லாமிய கிறிஸ்தவ பெயர் கொண்டவர்களுடைய பெயரை தமிழில்  பெயர் மாற்றியதாக எனக்கு நினைவில் இல்லை.
அப்பொழுதுதான் ராமசாமி என்கின்ற தனது தந்தையார் பெயரை தொல்காப்பியன் என்றுகூட மாற்றினார்.
பின்னர் சனாதன ஆதிக்கத்திலிருந்து விடுபடவேண்டு
மென்றால் பௌத்தம் தான் சிறந்தது என்று புத்தருடைய சிந்தனைகளை இந்த புவியில்விதைக்கிறேன் என்றுபிரசாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

மறுபுறம் தமிழர்களை இலங்கையில் கொன்று குவித்த ரத்தவெறியன்  ராஜபக்சேவிடம்  இலங்கை சென்று கரம் கோர்த்தார் .

மீனாட்சிபுரத்தில் “ஆதிக்க சாதியில் இருந்து மதம் மாறிய” ஆரம்பகால முஸ்லிம்கள் இருக்கின்ற பொழுது, தாழ்த்தப்பட்ட பட்டியலினத்திலிருந்து , முஸ்லிம்களாக மதம் மாறிய குடும்பத்தவர்கள் எத்தனை பேர்?

இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்?

சமூக விடுதலை பெறவேண்டும்
என்றால் இஸ்லாமிய மதம் மாறுவது தான் தீர்வு என்று சொல்லக்கூடிய அண்ணன் திருமாவளவன் அவர்களே!
சமூக விடுதலைக்காக பட்டியல் இனத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறிய சகோதரர்கள் எத்தனை பேர்?

ஏற்கனவே ஆதிக்க சாதியில் இருந்து மதம் மாறிய முஸ்லிம்கள் வீட்டில் எத்தனை குடும்ப  சம்பந்தம் இருக்கிறது.  குடும்ப உறவு முறை ஏற்பட்டிருக்கிறது? சமத்துவமான நிலை நிலவி இருக்கிறதா? என்பது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

மீனாட்சிபுரத்தில் இஸ்லாமிய சமூகத்தில் இன்றும் ஆதிக்கசாதி இஸ்லாமியர்கள் பட்டியல் இனத்தில் இருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் என்கின்ற
“மத சாதி பேதம் “இருக்கிறதா? இல்லையா?

பட்டியல் இனத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி மீனாட்சிபுரத்தில் இதுநாள் வரை திருமணம் ஆகாத முதிர் கன்னிகளாக 52 பெண்கள் (பட்டியல் இனத்தில் இருந்து மதம் மாறியவர்கள்)
இருக்கிறார்களே!

தேவையெனில் அந்த பட்டியலையும் நான் வெளியிட தயார்.

இந்த சமத்துவ இஸ்லாமிய மதம் சார்ந்த இளைஞர்கள் யாரும் இந்தப் பெண்களை திருமணம் செய்யாமல் தவிர்த்தது,
தவித்துக் கொண்டிருப்பது பொருளாதார காரணங்களுக்காக வா ?
அல்லது தாழ்த்தப்பட்ட
பிரிவிலிருந்து இருந்து இஸ்லாம் வந்தவர்கள் என்பதற்காகவா என்பதை  விளக்குவாரா?

“மீனாட்சிபுரம்”
மதமாற்றத்தின்போது மீனாட்சிபுரம் கண்மணியாபுரம்  வேலாயுதபுரம் போன்ற இடங்களில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் மதரஸாக்களில் இன்று சென்று தொழுகை நடத்தக்கூடிய மதரஸாவில் படிக்கக் கூடியவர்கள்
எத்தனை பேர் என்பதை திருதொல் .
திருமாவளவன் அவர்கள் சொல்வார்களா?

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் புத்தகம் எழுதிய மீனாட்சிபுரத்தில் உண்மைத் தகவலை ஆவணப்படுத்திய எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் அவர்களோடு இந்த மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து பொது விவாதம் நடத்துவதற்கு தயாரா?

இஸ்லாமிய மதமாற்றம் தான் சமூக விடுதலைக்கான தீர்வு என்று சொல்லக்கூடிய திருமாவளவன் அவர்கள் இஸ்லாமியர்களின் நோன்பு காலங்களில் நோன்பு வைத்து குல்லா போட்டு அல்லா பெயர் சொல்லக்கூடிய இவர் உண்மையிலேயே சமூக விடுதலை வேண்டும் எனில் இதுவரை இஸ்லாமியராக மதம் மாறி செல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. தலித்துகளும் இஸ்லாமியர்களும் ஒன்றாக டிசம்பர் 6 தலித் இஸ்லாமிய எழுச்சி நாள் இன்று கூட்டம் நடத்தக்கூடிய திருமாவளவன் அவர்களே நீங்கள் பட்டியலின மக்களையெல்லாம் அப்பாவி மக்களை எல்லாம் அரபுநாட்டு மதத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய ஏஜென்ட் என்று சந்தேகிக்க தோன்றுகிறது.
திரு தொல் திருமாவளவன் அவர்களே!
நீங்கள் யாருக்காவது ஒருவருக்கு உண்மையாக இருங்கள் சில நாட்கள் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொல்லி கட்சி ஆரம்பித்து இது பட்டியலின மக்களுடைய பாதுகாப்பு என்று பரப்புரை செய்து பின்னர் வடமாவட்டங்களில் ஆதிக்க சாதியினர் என்று சொல்லக்கூடிய சாதியினரோடு கலவரங்கள் உருவான காலத்தில் எல்லாம் வம்பு வழக்கு வாங்கி வாழ்க்கை இழந்த பல பேருடைய கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

கலவரத்தில் வழக்கு வாங்கிய பலர்
காவல் நிலையத்திற்கும், கோர்ட்டுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருப்பது நாடே அறியும்.

தாங்களும் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களும் கூட்டணி சேர்ந்து பின்னர் கூட்டணி முறிந்தது காரணம் என்ன?

இரண்டு தலைவர்களை நம்பி சண்டையிட்ட சமூகத்தினர் தான் கேள்விகளின் ஆச்சரியக்குறி!

“சனாதனத்தை வேரறுப்போம் பௌத்தத்தை இம்மண்ணில் விதைப்போம் “என்று சாக்கிய பௌத்தர்களுக்கு கையாளாக செயல்பட்டீர்கள் சிலகாலம்!

தற்போது சமூக விடுதலைக்கு இஸ்லாம் மதமாற்றம் தான் தீர்வு என்று சொல்கிறீர்கள்!

உங்கள் மாறும் மனநிலையில் மக்களை பலிகடா ஆக்க வேண்டாம்.
இவர் இந்து சமுதாயத்தை பிறகு வந்த கோடரிகளில் முதலானவர்.
சமுதாய மக்கள்
இவர் செய்யும் அரசியலுக்கு- தொழிலுக்கு
“முதல்” ஆனவர்கள்.

நிறைவாக அண்ணன் திருமாவளவன் அவர்களே தாங்கள் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்றுசொல்லக்கூடிய அமாக்ஸ் போன்ற பலரை தாங்கள் அழைத்துக் கொள்ளுங்கள் நாமும் இந்து சமுதாயத்தொண்டு இந்து இயக்க தலைவர்களை துறவிகளை புது மனிதர்களை அழைத்துக்கொண்டு கூட்டு குழுவாக மீனாட்சிபுரம் சென்று உண்மையிலேயே சமூக விடுதலை இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின்னர் கிடைத்திருக்கிறதா என்று ஒரு ஆய்வு செய்வோம் அந்த ஆய்வை பொதுவெளியில் இரு தரப்பாரும் சேர்ந்து வெளியிடுவோம் நாங்கள் தயார் அண்ணன் தயார் என்றே நம்புகிறேன்.

பாமகவில் பல ஆண்டுகள் பயணித்து சில கருத்து முரண்கள் காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று தொடங்கிய திரு பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய அரசியல் பயணத்தில் தேசவிரோத,
இந்து விரோத கருத்துக்களை பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டில் கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்காக வெளிநாட்டு மதத்தவர்கள் பண்பாட்டை பின்பற்றக்கூடிய தமிழ்நாடு முஸ்லிம்கள் மத்தியில், அவர்களுடைய மேடைகளில் தரம் தாழ்ந்து அநாகரீகமாக பேசக்கூடிய திரு  வேல்முருகன் அவர்கள் இந்து சமுதாயத்தை பிளக்க வந்த இன்னொரு கோடரி.

ஈழ ஆதரவு போராட்டங்கள் என்று பேசி தமிழ்நாட்டில் இஸ்லாமிய கிறிஸ்தவ அவர்களுடைய கைப்பொருள் ஆக இவர் செயல்படுகிறார்.

செங்கல்பட்டில் கிறிஸ்தவர்கள் மீது  இந்துக்கள் தாக்கினார்கள் என்று பேசினார். அதேநேரத்தில் பாலேஸ்வரம் முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எந்த வார்த்தையும் பேசவில்லை.

திமுக கூட்டணியில் ஆதரவு கட்சியாக அங்கம் சேர்ந்த பிறகு இஸ்லாமியர்களிடம் இருந்து உதவிகளை பெற வேண்டும் அவர்கள் அமைத்துக் கொடுக்கக்கூடிய மேடைகளில் வாயை வாடகைக்கு விட வேண்டும் என்பதுபோல தரம் தாழ்ந்து பேசக்கூடிய திரு வேல்முருகன் வடமாவட்டங்களில் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இஸ்லாமியர்களால் தூண்டி விடக்கூடிய கலவரங்களுக்கு ஒரு காரணப் பொருளாக இவர் இருப்பார்.

காரணம் முதலில் இஸ்லாமியர்கள் நேரடியாக இந்துக்களை தாக்கினார்கள். நேரடியாக இந்துக்களை விமர்சனம் செய்து பேசினார்கள் .
ஆனால் தற்போது திரு திருமாவளவன் திரு வேல்முருகன் போன்ற நாக்கு பிரட்டி அரசியல் தலைவர்களால் விஷக் கருத்துக்களை விஷம சிந்தனைகளை,
சமுதாய  பிளவு கருத்துக்களை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இது மிக ஆபத்தில் தான் சென்று முடியும்.

சென்னை தி நகரில் கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் இதே வேல்முருகன்
திரு ஹெச்.ராஜா அவர்கள் குறித்து அவதூறு பேசினார்.
அநாகரிகமாகபேசினார்.

அதேபோல் சில தினங்களுக்கு  முன்பு  திருச்சியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் காஷ்மீர் 370 சம்பந்தமான ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்கள் கைதட்டல்,
“பை “தட்டல் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு
பேசியிருக்கிறார் .
இது மிகுந்த கண்டனத்திற்குரியது

தமிழக அரசு, காவல்துறை வடமாவட்டங்களில் குறிப்பாக கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம்தர்மபுரி  இதுபோன்ற பகுதிகளில் நடக்கக்கூடிய சிலை உடைப்பு சம்பவங்கள்,

ஆதிக்க சாதியினர் மீது வீணான வம்பு சண்டைக்கு இழுப்பது,
காதல் பிரச்சனை அதன் மூலம் நடக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாமியர்கள் நேரடி தொடர்பு இல்லாமல் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு அச்ச உணர்வு அந்தப் பகுதியில் நிலவி வருகிறது.
ஆகவே தமிழக அரசும் ,காவல் துறையும், மத்திய அரசும் ,மத்திய உளவுத் துறையும், தேசிய புலனாய்வு முகமை ……
இந்த இருபெரும் தலைவர்களின் பின்னணியை குறித்து ஆராய வேண்டும்.

கண்காணித்து சாதி கலவர ஏற்படாதிருக்க தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்திட தேவையற்ற  இந்தக் கோடரிக் காம்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.இவர்களை நம்பி அரசியல் இயக்கத்தில்  தொண்டர்கள் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பயணிக்க வேண்டுகிறோம்.

காரணம் தங்கள் சுயநலத்திற்காக சமூகத்தை கூட பலி கொடுக்க இவர்கள்  தயங்க மாட்டார்கள்.

பணத்திற்காக அரசியல் அதிகாரத்திற்காக தாய் மதத்தையும் தாய் மத சகோதரர்களையும் பிளவுபடுத்தி சமூகத்தில் வாழ நினைக்கும் இவர்களை எதிர்கால வரலாற்று சமூகம் மன்னிக்காது .

நல்ல செடிகளும் நல்ல மரங்களும் இந்த மண்ணில் விதைக்கப்படுகிறது; வளருகிறது.

இதே மண்ணில் தான் விஷச் செடிகளும், கருவேல மரங்களும் முளைத்து விடுகிறது.

நல்ல மரங்கள் இந்த மண்ணில் வளர்ந்து என்றும் நிழல் தரும்.
இவர்கள்
“பார்த்தீனிய செடிகள்”
போன்றவர்கள் .

மண்ணை மட்டுமல்ல; மனிதர்களையும் கெடுக்கும் விஷச் செடிகள்.
கோடரிக் காம்புகாக கோடரியால்
மரத்தை வெட்டும் போது மரத்திற்கு தெரியாது.

தன்னை வெட்ட பயன்படும் கோடரிக்கு  காம்பாக போகிறோம் என்று அந்த மரத்திற்கு தெரியாது.
திரு தொல் திருமாவளவன்,
திரு வேல்முருகன் இந்து சமுதாயத்தை பிளக்க வந்த இரண்டு கோடரிக் காம்புகள். எச்சரிக்கை தேவை!!

இராம .இரவிக்குமார்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*