Monday, August 10, 2020

ஐ.எஸ்.ஐ.எஸ். பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் – ஐ.நா. பகீர் அறிக்கை.

அல் கொய்தா இந்திய துணைக்கண்டம் பயங்கரவாத அமைப்பு (AQIS) இந்தியாவில் தனது பயங்கரவாத தாக்குதலை நடத்த  ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய “ஹிந்த் விலாயத்” அமைப்பை சேர்ந்த 180 முதல் 200...

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

பள்ளிக் கூடமா? கிறிஸ்தவ மதமாற்ற கூடமா?

மாணவர்களை மதமாற்ற முயற்சிக்கும் ஜெப கூட்டத்தை தடுத்து நிறுத்துக.

இந்து மக்கள் கட்சி தமிழகம் – கோரிக்கை

Rama Ravi Kumar
இராம. இரவிக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430_81430
96553 – 65696

“இயேசு விடுவிக்கிறார் ”
வாலிபர் ஊழியம் வழங்கும்

திருச்சியில் 2019 அச்சீவர்ஸ்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை

இடம் :csi john vestry ஸ்கூல் கிரவுண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி

நாள் :ஜனவரி 6
நேரம் மாலை 5.30மணி
முதல் 8 மணி வரை

தலைமை
பேராயர் D.சந்திரசேகரன்
CSI -திருச்சி – தஞ்சை
திருமண்டல பேராயர் .

செய்தியும் ஜெபமும்
மோகன் சி லாசரஸ்
என்ற விளம்பர அறிவிப்பு திருச்சியில் வெளியாகி இருக்கிறது .

மாணவர்கள் தேர்வில்வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ சபை கூட்டத்தை மேற்படி பாதிரியார். மேலே குறிப்பிட்ட பள்ளிக்கூட வளாகத்தில் ஏற்பாடு செய்கிறார்.

அரசு உதவி பெறக்கூடிய
சிறுபான்மை கல்வி நிறுவனம் என்கின்ற அந்தஸ்தோடு செயல்படக்கூடிய இந்த பள்ளி கூடம்,

மதமாற்றம் செய்வதையே தன்னுடைய வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருக்கக் கூடிய தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி சார்ந்த மோகன் சி லாசரஸ் என்கின்ற கிறித்தவ பாதிரியாரை அழைத்து செய்யும் ஜெபமும் செய்ய இருப்பதாக தெரியவருகிறது.

மோகன் சி லாசரஸ் என்ற பாதிரியார் சமீபத்தில் சர்ச்சைக்குரிய இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இந்து வழிபாட்டு தலங்கள் குறித்தான அவதூறு கருத்துக்களை தெரிவித்திருந்தார் .

“இந்து கோவில்கள் எல்லாம் சாத்தான்கள் குடி கொள்ளும் இடம் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாது வருடத்திற்கு 25,000 நபர்களை நான் கிறிஸ்துமதமாற்றம் செய்கிறேன் என்று கூட ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் .

அப்பாவி மக்களிடம் ஏழ்மை, வறுமை, இயலாமை போன்றவற்றை பயன்படுத்தி

“கர்த்தர் அனைத்தையும் உனக்காக தருவார்.

இயேசுவை நம்புங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் ”
என்று ஆசை வார்த்தை கூறி,

இந்து மத நம்பிக்கைகளை சிதைத்து கிறிஸ்தவத்திற்கு வர வைப்பதில் வல்லவர்.

அதாவது கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதில் ஆகச்சிறந்த பாதிரியார் இந்த மோகன் சி லாசரஸ்.

இப்படி மதமாற்றம் செய்யக்கூடிய
ஒரு மத வியாபாரி
மோகன் சி லாசரஸ் அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் இந்த கிருத்தவ பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஒரு ஜெபக்கூட்டம் நடக்குமேயானால் அப்பாவி மாணவர்களின் மனதில்,

“இயேசு எல்லாம் செய்ய வந்தவர் ” நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று,
அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால்
“இயேசு பிரானை போற்றி துதியுங்கள்” என்று மதப்பிரச்சாரம் செய்து மாணவர்களுடைய மனதில் மாற்றத்தை உருவாக்கி ,

பின்னர் மதமாற்றம் செய்வதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

அரசு நிதி உதவியோடு செயல்படக்கூடிய இந்த சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் அனைத்து மாணவர்களும் தான் படித்து வருகிறார்கள் .

அப்படி இருக்கையில்
ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ மதப் பிரச்சார கரை அழைத்துவந்து தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

அதற்காக நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்துகிறோம் என்று சொன்னால் அது முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத் திணிப்பு ஆகும் .

நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயமாக தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவார்கள் .

ஆனால் நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இயேசுநாதர் தான் உதவி புரிந்தார் என்று சொன்னால்எப்படி இருக்கும் ?

இல்லை நாங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவர்கள் கிறித்தவ மதத் திணிப்பு இல்லை என்று இந்த கிருத்துவ பாதிரியார் சொல்வாரேயானால் ,

அதே பள்ளி வளாகத்தில்
மாணவர்கள் தேர்வில்வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி கூட்டு வழிபாடு,

“ஹயக்ரீவர் ஜெப வழிபாடு” நடத்துவதற்கு மேற்படி பள்ளி நிர்வாகம்
அனுமதி வழங்குமா?

அப்படி வழங்கினால்
இந்த நிறுவனம் கிறித்தவ மதமாற்ற நிறுவனம் இல்லை என்பது நிரூபணமாகும்.

இல்லையென்றால் பள்ளிக்கூட மைதானத்தை மதமாற்ற கூடமாக மாற்றிய கொடுஞ்செயலுக்கு அரசாங்கமே ஆதரவு தெரிவிப்பது போல் ஆகிவிடும் .

நாங்கள் கிறித்தவ மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல .

உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய பாதிரியார் கிறிஸ்தவ திருச்சபைகளில் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கூட்டுவழிபாடு என்று சொன்னால் நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை.

அது இல்லாமல் இப்படி ஒரு பள்ளி மைதானத்தில் நடத்துவது தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

குறிப்பாக பாதிரியார்
மோகன் சி லாசரஸ் அவர்கள் இந்த கோவில்களில் இந்து வழிபாட்டு முறைகள் அவமதித்து பேசினார் மதக் கலவரங்கள் முயற்சித்தார் என்று திருச்சி காவல் நிலையத்தில் ஏற்கனவே இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு, எப்.ஐ.ஆர் . போடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது
நாகை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஆறு காவல் நிலையங்களில் அவர் மீது எப்ஐஆர் ஆர் போடப்பட்டுள்ளது.

அரசும் பள்ளிக்கல்வித்துறை . மாணவர்களை மதமாற்ற நிகழ்ச்சி கூடிய மோகன் சி லாசரஸ் அவர்கள் கலந்து கொள்ளக்கூடிய மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

(இந்த செய்தியை படிக்கக்கூடிய ஒவ்வொரு இந்து ஆர்வலரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும்

மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் திருச்சி அவர்களுக்கும்

மதிப்பிற்குரிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் இது சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மோசடி மதமாற்றம் தடுத்திட
ஹிந்து மதம் காத்திட அனைவரும் பணி செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.)

Latest Posts

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

சென்னை கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து: எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் கடந்த 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்...

ஸ்ரீ ராமர் கோவிலின் மாதிரி அமைப்பு படங்களை இங்கே பார்க்கலாம்.

ஸ்ரீ ராமன் கோவில் மொத்தம் இரண்டு தளங்கள். 270 அடி நீளம், 140 அடி அகலம், 128 அடி உயரம். உள்ளே செல்ல பிரமாண்டமான ஐந்து வாசல்கள். கோயில் முழுக்க...

மதுரையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு – CCTV காட்சிகள்

மதுரையில் பட்டப்பகலில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சைக்கிளில் வரும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், அந்த மூதாட்டியை தாக்கி தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள்...

Don't Miss

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...

scooty-யில் வந்து Royal Enfield புல்லட்டை ஆட்டைய போட்ட பலே திருடர்கள்!

source: Polimer News சென்னை வேளச்சேரியில் புதிய ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி...

பற்றி எரிந்த தீ – இரு குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றிய தாய்

பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் காயமின்றி காப்பாற்றினர் கிரனோபிள் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில்...

துப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்?: அன்றைய முதல்வர் கருணாநிதி

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை 1970-ஆம் மின்கட்டண உயர்வு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 3 பேர்சுடப்பட்டு இறந்ததற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம்...