234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன்
மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன் ஆனால் கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு, கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை. தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் நான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன், தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை.
தற்போது அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம், கட்டாயம் என்பதால் கட்சி துவங்குகிறேன். கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒரு போதும் மாறப்போவதில்லை. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்