Wednesday, December 2, 2020

சுவர் விளம்பரத்திற்காக பாஜக மகளிரணியை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் 17.09.2020 அன்று நடத்த உத்தேசம்.

ஸ்ரீ திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின்போது, வருடந்தோறும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஆதிசேஷன் அம்சமாகிய, அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள், ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பாக, தமிழ்நாட்டில் இருந்து பாதயாத்திரையாக எடுத்துச்செல்லப்பட்டு, திருமலையில் அருள்புரியும் ஸ்ரீ ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதை சுமார் 20 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள்.

thirupathi thiru kudai

200 ஆண்டுகளுக்கும்மேலாக, பாரம்பரியமாக நடைபெற்று வரும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தரிசித்துவரும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த ஆண்டும், ஹிந்து தர்மார்த்த சமிதி ஏற்பாட்டில், வரும் 17.09.2020 (வியாழன்) அன்று, ‘ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம்’’, சென்னையில் வழக்கம்போல தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 03.00 மணிக்கு திருக்குடைகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

thirupathi thiru kudai

இதற்காக, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் அனுமதி கோரி, உரிய துறைகளின் அதிகாரிகளுக்கு, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

நோய் பரவல் தடுப்பிற்காக, தற்போது, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அப்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டே, சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து, ஸ்ரீ திருப்பதி திருக்குடை பாதயாத்திரை நடத்துவதற்கான அனுமதி கிடைக்குமா, மறுக்கப்படுமா என்பது தெரியவரும்.

தக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நிலவும் ஆரோக்கிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஸ்ரீ திருப்பதி திருக்குடை பாதயாத்திரை நடத்துவது குறித்த, அடுத்த அறிவிப்பு ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் வெளியிடப்படும்.

thirupathi thiru kudai

உலக நன்மைக்காகவும், பாரதத்தின் வலிமை மற்றும் வளத்திற்காகவும், மக்கள் பூரண சந்தோஷம் பெறவும், நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் நீண்ட ஆயுள் பெறவும், தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, தாய்த்திருநாட்டின் எல்லைகளை அல்லும், பகலும் அயராது காத்துவரும் நமது ராணுவ வீரர்கள் நலன் வேண்டியும், அச்சுறுத்தும் நோய் தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், அதற்காக அரும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் பூரண நலம்பெறவேண்டும் என்பதுவே நமது பிரார்த்தனைகள்.

மேற்கண்ட பிரார்த்தனைகள் நிறைவேறவும், ஹிந்து தர்மார்த்த சமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடை பாதயாத்திரை நடைபெறுவதற்கு உகந்த சூழல் அமையவும் வேண்டி, தினமும், காலை அல்லது மாலை வேளைகளில், வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து, ‘‘ ஓம் நமோ நாராயணாய ’’ என்ற மந்திரத்தை 108 முறை, குடும்பத்துடன் உச்சரித்து, ஏழுமலையான் அருளை வேண்டுவோம்.

ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளை தரிசிக்க ஆவலோடு காத்திருக்கும் பக்தர்களும், ஸ்ரீ திருப்பதி திருக்குடை கமிட்டி நிர்வாகிகள் – உறுப்பினர்களும், திருக்குடைக்கு அனுமதி கிடைக்கும் வரை, நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட்டின் அறங்காவலர், ஆர்ஆர். கோபால்ஜி வெளியிட்டுள்ளார்.

நாள்: 25.07.2020
இடம்: சென்னை

குறிப்பு: ஸ்ரீ திருப்பதி திருக்குடை பாதயாத்திரை – 2020 குறித்து மேற்கொண்டு தகவல் வேண்டுவோர், சம்பந்தப்பட்ட ஸ்ரீ திருப்பதி திருக்குடை கமிட்டி பொறுப்பாளர்களை அணுகவும்.
மேலும் விவரங்களுக்கு: கே.எல் சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர்), 73730 99562

ஸ்ரீ திருப்பதி திருக்குடை
உபய உற்சவ பாதயாத்திரை – 2020
*
அன்பான ஓர் முக்கிய அறிவிப்பு!
*
ஸ்ரீ திருப்பதி திருக்குடை
உபய உற்சவ (ஊர்வலம் ) பாதயாத்திரை
உத்தேசித்துள்ள நாட்கள் விவரம்:

தொடக்கம்: 17.09.2020 (வியாழன்)
சமர்ப்பணம்: 22.09.2020 (செவ்வாய்)
*

Latest Posts

30 வருடங்களுக்கு பின் இந்திய அரிசியை வாங்கும் சீனா.!

உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதி செய்யும் நாடான சீனா, சுமார் 30 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகிலேயே...

செய்த தவறை நினைத்து திருந்திய விராட் கோலி.., நடராஜனை களத்தில் இறக்க முடிவு

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் பவுலர்கள் மோசமாக சொதப்பினார் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அனைவரும் விழித்து வாங்கினார் இரு போட்டிகளிலும் இந்திய பவுலர்கள் ரன்களை...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை...

Don't Miss

விழுங்கிய முட்டைகளை ஒவ்வொன்றாக வெளியே கக்கிய நல்லபாம்பு வீடியோ

ஒடிசா மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த நல்ல பாம்பு ஒன்றினை பிடித்த போது அது விழுங்கி இருந்த கோழி முட்டைகளை வெளியே கக்கியது. https://youtu.be/iPp_ZT7LEI0

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்பது உண்மையே!!!: வூகான் பெண் விஞ்ஞானி

சீனாவினுடைய வூகான் நகரில் உள்ள அரசு பரிசோதனைக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டினுடைய கிருமியியல் ஆய்வாளர்வர் லி மெங் யான் (Dr. Li-Meng Yan) தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்கிஸ்தான் மிக சிறப்பாக போராடி வருகிறது.. நம்புற மாதிரியா இருக்கு?

பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால் செயல் என்றும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகத்தையும் செய்து வருவதாகவும். சர்வதேச சமூகம் அதனை அங்கீகரித்து...

ஓட்டுநர் வேலைக்கு அழைத்து சென்று ஒட்டகம் மேய்க்க வைத்து கொடுமை..கதரி அழும் இளைஞர் வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் லட்சியம் என்ற கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் சவூதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, முதல் 2 மாதத்திற்கு மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்துவிட்டு....

அசால்டாக துப்பட்டாவை காலில் கட்டிக்கொண்டு தென்னைமரம் ஏறிய நடிகை!!!

தனி ஒருவன் மற்றும் அஞ்சான் என பல தமிழ் படங்களில் நடித்து வருபவர் நடிகை சஞ்சனா சிங். இவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர்....