இஸ்லாமியர்கள் மீதான பாசமா? இல்லை இந்திய தேசத்திற்கு எதிரான துரோகமா? வைகோ-பதில் சொல்வாரா?

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப்பிரிவு 35ஏ ,
370 சிறப்பு சட்டத்தை ரத்து செய்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

ஒரே நாட்டில் இரண்டு அதிகாரம் கூடாது, ஒரு மாநிலத்தில் இரண்டு கொடிகள் இதுபோன்ற பாகுபாடு நீக்கி சமமான அரசியல் அதிகாரத்தின் எல்லையை காஷ்மீர் வரை பாரத அரசு விரிவுபடுத்தியிருக்கிறது.

*இந்த தீர்மானத்தை இந்து தமிழர் கட்சி சார்பில் வரவேற்று பாராட்டுகிறோம்.

*காஷ்மீர் மாநிலம் காக்க உயிர் தியாகம் செய்த அத்துணை திருவுருவங்களுக்கு காணிக்கையாக இந்தத் தீர்மானம் அமையும்.

அதே நேரத்தில்
இந்த தீர்மானத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

திரு ஸ்டாலின் அவர்கள் காஷ்மீர் மாநில தேர்தல் வரும்வரை மக்களாட்சி வரும்வரை காஷ்மீருக்கான 370 சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பிரிவினை பேச்சு பேசக்கூடிய திருமுருகன் காந்தி போன்றவர்கள் இது ஜனநாயக படுகொலை ஜனநாயக விரோதம் என்று பேசுகிறார்.

திரு வைகோ அவர்கள் பாராளுமன்றத்தில் பேசிய பேச்சு முழுக்க முழுக்க காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களுக்கு விரோதமான பேச்சு. பிரிவினைவாத
பயங்கரவாத சக்திகளுக்கு ஆதரவான பேச்சு.

இந்த சிறப்பு சட்ட அங்கீகாரத்தை
நான் எதிர்க்கிறேன் நெஞ்சு தீப்பற்றி எரிகிறது.

காஷ்மீர் தீப்பிடிக்கும் காஷ்மீர் இஸ்லாமிய இளைஞர்களை வெளியேற்ற முடியுமா?
இப்படி எல்லாம் உசுப்பேற்றும் வகையில் வைகோ வெறி பேச்சு பேசியிருக்கிறார்.

ஏற்கனவே
ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று உலகத் தமிழர்களை எல்லாம் ஏமாற்றி வயிறு வளர்த்த வைகோ தற்பொழுது கஷ்மீரி முஸ்லிம்களுக்கு நான்தான் காவலன் என்பதுபோல வீராவேசமாக வீரவசனம்
பேசி தன்னுடைய வியாபாரத்தை உலக இஸ்லாமியர்கள் மத்தியிலும், தாலிபான் ஆதரவாளர்கள் மத்தியிலும் விரிவுபடுத்த முயற்சிக்கிறார்.
திரு. வைகோ மற்றும் திரு. ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களிடம் சில கேள்விகள் முன்வைக்கின்றோம்
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

காஷ்மீர் பாரதநாட்டின் அங்கமா, இல்லையா? ஒரே நாட்டில் இரண்டு அதிகார மையம் இரண்டு கொடி, பிரதமராக இருந்தாலும் ஜனாதிபதியாக இருந்தாலும் ஒரு அடி இடம் கூட வாங்க முடியாது என்பது போன்ற சட்டத்தை எல்லாம் இந்த வைத்து ஆதரிக்கிறாரா?

காஷ்மீரை காப்பதற்காக
உயிர் விட்டார்கள் தமிழக இளைஞர்கள் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது போல நடித்து பேசும் வைகோ இதுநாள் வரை பயங்கரவாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் காஷ்மீரத்தில் கலவரம் செய்து இந்துக்களை விரட்டியடித்து;
இந்து பண்டிட்டுகளின் இடங்களையெல்லாம் பிடுங்கிக்கொண்டு, இந்து தாய்மார்களை கற்பழித்து நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்த கொடுமையின் போது இந்த வைகோவும் ஸ்டாலினும் வாயில் என்ன வைத்துக் கொண்டிருந்தார்கள்? என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

காஷ்மீர்
வீதிகளிலும் டெல்லி சாலைகளிலும் சொந்த நாட்டில் அகதிகள் போல, பிச்சைக்காரனாக திரிந்த போது இந்த பேர்வழிகள் எல்லாம் எங்கே இருந்தார்கள்?

இன்று பாரதப் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் ஏக்தா யாத்திரை நடத்தி தேசியக்கொடி ஏற்ற முயற்சித்தபோது காஷ்மீரத்தில் பாரத தேசிய கொடி ஏற்ற கூடாது என்று அடக்குமுறையை ஏவி விட்ட போது அமைதியாக இருந்தது ஏனோ?

இஸ்லாமியர்கள் மீதான பாசமா? இல்லை இந்திய தேசத்திற்கு எதிரான துரோகமா? பதில் சொல்வாரா வைகோ

மனித உரிமை அமைப்புக்கள் தலையிட வேண்டும்.

சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்று வாய்கிழிய காஷ்மீர் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் வைகோ அவர்களே
பஞ்சப்பரதேசிகள் போல பாரத
நாட்டுடைய குடிமகன்,
சொந்த மண்ணின் மைந்தன் திரிந்த
போது வாய் மூடி மௌனியாக இருந்தீர்களே!
நீங்கள் காஷ்மீர் இந்துக்களுடைய துரோகி இல்லையா?

ராணுவ வீரர்கள் மடிந்தார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் வைகோ அவர்களே இந்திய ராணுவ வீரர்களை திரும்பிச் செல்லுங்கள், இந்திய ராணுவ நாய்களே திரும்பிச் செல்லுங்கள் என்று காஷ்மீரத்தில் கலவரம் செய்த போது, இஸ்லாமிய பயங்கரவாதிகளை இஸ்லாமியமதவெறி இளைஞர்களை எதிர்த்து வைகோ வாய் திறந்தாரா?

பாரத தேசம் சுதந்திர தினத்தின் போது இந்திய தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்திய தேசத்துரோக நாய்களுக்கு எதிராக இந்த வைகோ பேசாதது ஏன்?

கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டார். காஷ்மீர மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்தது. இப்படியெல்லாம் வைகோ பேசுகிறார்.
ஒருவன் சிறை வைக்கப்பட்ட இடத்தை அவன் பெயரை நினைவு சின்னம் ஆகிய கொடுமை தமிழகத்தில் தான் நடந்திருக்கிறது.

கொடைக்கானல் சுற்றுலா மாளிகைக்கு ஷேக் அப்துல்லா மாளிகை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அப்படியானால் வைகோவின் உடைய பெயரை பல சிறைச்சாலைகளுக்கு வைக்க வேண்டும்.

தமிழக அரசு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாக இருந்த ஷேக் அப்துல்லா பெயரை கொடைக்கானல்
சேக் அப்துல்லா மாளிகை என்கின்ற பெயரை மாற்றி “வீரத்தியாகி சுதந்திரப் போராட்ட மாவீரன் சுப்பிரமணிய சிவா” பெயரை சூட்ட வேண்டும்.

இன்று காஷ்மீரத்தில் இந்த சட்டத் திருத்தத்தை அனுமதித்தால் நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்று திருமுருகன் காந்தி பேசுகிறார்.

இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த சிறப்பு அந்தஸ்து கிடையாது என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது அறிவீனத்தின் உச்சம்.

ஜனநாயக சக்தி என்று திருமுருகன் சொல்லுகிறார். இந்திய சட்டத்தை
ஏன் மதிக்கவேண்டும்?
இந்தியா ஒரு பொறுக்கி நாடு என்றெல்லாம் பேசிய ஜனநாயக விரோத சக்தி திருமுருகன் காந்தி .
இந்த ஜனநாயக வேஷதாரி.

ஆகவே பாரதப் பிரதமர் மோடி அவர்கள் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட
இந்துக்களை மீண்டும் அவர்கள் சொந்த மண்ணில் குடியேற்றுவதற்கு வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம்.

மேலும் இந்த காஷ்மீர் விவகாரத்தை வைத்து தமிழகத்தில் பிரிவினைவாத பயங்கரவாத சக்திகள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசையும்,
மத்திய அரசையும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.

இராம இரவிக்குமார்

இந்து தமிழர் கட்சி நிறுவனதலைவர்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*