Friday, August 14, 2020

நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி( தமிழில் கேளுங்கள்)

பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த நாமக்கல் லாரி ஓட்டுனர் மகள் கன்னிகாவுடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி. கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், கதர் ஆடைகளை...

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

விசுவாசம் தமிழ் திரைப்படம்

விசுவாசம் சினிமா விமர்சனம்

கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் – நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.

இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் – நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மாஸ், கிளாஸ், மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார். சண்டைக்காட்சி குறிப்பாக மழையில் நடக்கும் சண்டை, பாத்ரூம் சண்டை என சண்டைக்காட்சிகளுக்கு அனல் பறக்கிறது. அஜித் தோன்றும் முதல் காட்சி, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா, நான் வில்லன்டா என அஜித் பேசும் பஞ்ச் வசனங்களில் மாஸ் அஜித்தை பார்க்க முடிகிறது.

நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

வீரம் படத்திற்கு பிறகு குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார். அஜித் ரசிகர்களை இன்னமும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கலாம் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. மற்றபடி குடும்பத்துடன் இணைந்து பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மொத்தத்தில் `விஸ்வாசம்’ குடும்பத்தின் தேவை.

இயக்குநர் சிவா மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு விசுவாசம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விசுவாசம் படத்தின் இயக்குநர் சிவா

சிறுத்தை தமிழ் திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றதால் சிறுத்தை சிவா என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.

சிறுத்தை திரைப்படத்திற்கு அடுத்து ஒரு தெலுங்கு படம் மட்டுமே இயக்கி, நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என்று வரிசையாக படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் சிவா. இவர் படங்களில் சிறுத்தை படத்தை தவிர அனைத்து திரைப்படங்களையும் ஒளிப்பதிவாளர் வெற்றி மட்டுமே தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வருகிறார் . டி. இமான் அவர்கள் இசையமைத்துள்ளார் .
இந்த திரைப்படத்தை T .G தியாகராஜன் , அர்ஜுன் தியாகராஜன் மற்றும் செந்தில் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

விசுவாசம் படத்தின் நடிகர்கள்

அஜித் குமார் , நயன்தாரா, விவேக் , தம்பி ராமையா, யோகிபாபு மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

viswasam movie Review

பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் விசுவாசம்

அஜித்குமார் நடித்த விசுவாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Latest Posts

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு!

நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் இந்துக்களின் கோவிலான ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கொரோனா வைரஸை மிகச்சிறந்த கட்டுப்பாடுகளுடன் எதிர்த்த ஜெசிந்தா ஆர்டனுக்கு பாராட்டுக்கள்...

1 சவரன் நகைக்காக புதுப்பெண்ணின் உயிரை பறித்த இளைஞர்கள்

சிவகாசியில் ஒரு சவரன் நகைக்காக புதுப்பெண்ணை கொலை செய்த எதிர் வீட்டு இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 8ம் தேதி பெரியார் காலனியில்...

காணாமல் போன நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.10,000 பரிசு!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணி நாய் லில்லியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் பரிசு தருவதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். Images...

கோடியக்கரை வந்த தரையிலும், கடலிலும் சீறிப்பாயும் ஹோவர்ட் கிராப்ட் கப்பல்

நகைப்பாட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் தரையிலும், கடலிலும் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய ஹோவர்ட் கிராப்ட் கப்பல் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த இந்த...

Don't Miss

வறுமையின் உச்சம் தள்ளாடும் வயதிலும் தளராமல் சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்பக் கலையை வெளிப்படுத்தி ரோட்டோரம் பிச்சையெடுப்பது காண்போரை கண்கலங்க வைப்பதாக உள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம்...

ரூ.100 லஞ்சம் தரமறுத்த சிறுவன் முட்டை வண்டியைத் கவிழ்த்துவிட்டு அதிகாரிகள் அட்டூழியம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், லஞ்சம் கொடுக்காத சிறுவனின் முட்டை வைத்து இருந்த தள்ளுவண்டியை, மாநகராட்சி அதிகாரிகள் கவிழ்ந்ததில் அதில் இருந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து நாசமாகின.

குழந்தை கடத்த முயன்றவர் மீது ஒரு புலியை போல் பாய்ந்த தாய்…

டெல்லி ஷகர்புர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த, டிப்டாப் ஆசாமிகள் இருவர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

பின்னிப் பிணைந்து 3 நாட்களாக தொடரும் பாம்புகளின் அரைமணி நேர நடனம்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காட்டுப் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடின. காமராஜபுரத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 8...

முசிறி அருகே கண்டெடுக்கப்பட்ட பழமைவாய்ந்த பீரங்கி குண்டு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பறை என்ற கிராமத்தில், மிகப்பழமை வாய்ந்த பீரங்கி குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 கிலோ எடை கொண்ட கல்லாலான உருண்டை...