வேல்முருகன் எப்போது சிலை ஆய்வு நிபுணர் ஆனார்? இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் இராம. இரவிக்குமார் கேள்வி?

அனுப்புனர்

சன் சிவா

இந்து மக்கள் கட்சி தமிழகம்
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்
எண் 14 – நாடி முத்து நகர்
பட்டுக்கோட்டை –
614 601
தஞ்சாவூர் மாவட்டம்
98659 12345

பெறுநர்
உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
தஞ்சாவூர்

பொருள்
தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பி வழக்கு நிலுவையில் இருக்கும்போது வழக்கை திசைதிருப்பும் நோக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அவரை விசாரணை வளையத்திற்குள் படுத்த வேண்டிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு .

பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

நான் மேற்கண்ட முகவரியில் இருக்கிறேன் .
இந்து மக்கள் கட்சி தமிழகம் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்ற பொறுப்பில் இருந்து இந்து சமுதாயப் பணி செய்து வருகிறேன்.

நான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவன் .

தஞ்சை பிரகதீஸ்வரர் மீதும் ,மாமன்னர் ராஜராஜ சோழன் மீதும் மிகுந்த பற்று, பக்தி கொண்டவன் .

தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர்
திரு வேல்முருகன் அவர்கள் கடந்த
02. 10. 2018 அன்று ஒளிபரப்பான மாலைமுரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதை பார்த்தேன் .

அதில் திரு வேல்முருகன் அவர்களிடம் நெறியாளர் கேட்ட கேள்விக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொன்மாணிக்கவேல் அவர்கள் ராஜராஜசோழன் சிலையை மீட்டு வந்ததாக சொல்கிறார்,

அவர் மீட்டு வந்ததாக சொல்லக்கூடிய சிலை உண்மையானது அல்ல,

இந்த மாலைமுரசு தொலைக்காட்சி வழியாக நான் இந்த உண்மையை அறிவிக்கிறேன்.

பொன்மாணிக்கவேல் அவர்கள் மீட்டுக் கொண்டு வரக்கூடிய சிலைகளைக் எல்லாம் 10 கோடி 20 கோடி என விலை நிர்ணயம் செய்கிறார்.

அப்படியானால் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிலைகளை வைத்து கொள்ளட்டுமே, அந்தப் பணத்தை அரசு கஜானாவுக்கு செலுத்தட்டுமே,

ஊடக பரபரப்புக்காக திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் .

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம்தான் இவர் சார்ந்த வழக்கு செல்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதியும் திரு பொன் மாணிக்கவேல் அவர்களும் சேர்ந்து கொண்டு 50 சிலைகளை மீட்டார் , 89 சிலைகளை மீட்டார், 60 சிலைகளை மீட்டார் , அப்படின்னு சொல்லி பரபரப்புக்காக பத்திரிகைகளை கூப்பிட்டு சொல்கிறார் , செயல்படுகிறார்.

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் .

திமுக ஆட்சிக்காலத்தில் குஜராத்திற்கு சென்று இது ராஜராஜ சோழன் சிலை அல்ல என கைவிடப்பட்ட வழக்கு.

பத்திரிகை பரபரப்பிற்காக ஐஜி பொன் மாணிக்கவேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

அவன் அவன் வீட்டில் அழகுக்காக வைத்திருக்கக்கூடிய சிலைகளையெல்லாம் கூட இவர் சோதனை போடுறாரு.

அருங்காட்சியகத்தில் பொருட்காட்சியில் வாங்கிய சிலைகளை கூட சோதனை இடுகிறார் .

சமீபத்தில் ஒரு மார்வாடி வீட்டில் சிலைகளை மீட்டதாக இவர் பரபரப்பு உருவாக்கினார்.

அதற்கெல்லாம் ரசீது இருப்பதாக மார்வாடி சொல்கிறார்

இதுபோன்ற அவருடைய முழு பேட்டி வெளியாகியது .

உயர்நீதிமன்ற நீதிபதிகள் உடைய வழிகாட்டுதலின் படி ஐஜி பொன்மாணிக்கவேல் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.
புராதானமான தொன்மை மிக்க சிலைகளை மீட்க கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் .

இந்த சூழலில் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற பொழுது வழக்கை திசைதிருப்பும் நோக்கத்தோடும்,

நீதிமன்றத்தின் மீதும் , நீதிபதி மீதும் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பேசி இருப்பது பெருத்த சந்தேகத்தை உருவாக்குகிறது.

அதுமட்டுமல்லாது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள் மீட்டு வந்த ராஜராஜ சோழன் சிலை உண்மைதானா அல்லது பொய்யானதா என்கின்ற சோதனைக்கு கொடுப்பதற்கு முன்பு தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் .

இவருக்கும் சிலை கடத்தல் குழுவினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இந்த பேட்டி மூலம் அறிய வருகிறோம் .

 

ஆகவே மதிப்பிற்குரிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி
திரு வேல்முருகன் அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்த வேண்டுகிறோம் .

அப்படி விசாரித்தால்பல உண்மைகள் வெளி வரும் .

இதற்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

நன்றி

இப்படிக்கு தேசப்பணியில்

சன் சிவா

இணைப்பு
மாலைமுரசு தொலைக்காட்சியில் வெளியான முரசரங்கம் நிகழ்ச்சியில் திருவேல்முருகன் அவர்கள் பங்கேற்ற வீடியோ

நாள் : 11.10.2018

இடம் :தஞ்சாவூர்

Please follow and like us:

Be the first to comment

  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply

Your email address will not be published.


*