ரஜினிகாந்த் துவக்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி (வயது 60) அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர். ஆரம்பத்தில் உணவு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்.

அதற்க்கு பிறகு தொழில்நுட்பத் துறை தொழிலில் இறங்கினார். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பின் பாரதிய ஜனதாவில் இணைந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் மாமா வீட்டில் சம்பந்தம் செய்தவர். இவரது மனைவி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமனின் பள்ளித்தோழி மேலும் பாரதிய ஜனதா தலைமையுடன் நெருக்கமாக இருந்து வந்தவர். தற்போது அவர் ரஜினிகாந்த் துவக்க இருக்கும் அரசியல் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.