நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, அவரது ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது கூறி வந்தார். மேலும், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். இதனிடையே, மன்ற நிர்வாகளை நேற்று சென்னை அழைத்து ஆலோசனை நடத்தினார்அப்போது, அரசியல் கட்சி அறிவிப்பு விரைவில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்இந்நிலையில், நடிகர் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது மனைவி, குழந்தைகள் ஆகியோரை விட்டுவிட்டு, ரஜினிக்காக காத்திருப்பதாக அந்த ரசிகர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ரசிகர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற தகவல்வெளியாகவில்லை. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது