Saturday, October 12, 2024

பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தில் ஸ்மிருதி இரானி பேச்சு

புதுடெல்லி,பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அப்போது அவர்...

Latest Posts

“அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவனுக்கு பட்டம் சூட்டிய அண்ணாமலை!

கீதா ஜீவனை பார்த்து நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் கூட அழுகிய முட்டை குழந்தைகளுக்கு போடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை.

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

சக்ரா – விமர்சனம்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், கே.ஆர்.விஜயா, ரோபோ ஷங்கர், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சக்ரா’.

இந்திய சுதந்திர தினம் பரபரப்பான கொடியேற்றம், போலீஸ் பாதுகாப்பு என நகரமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வேளையில் போலீஸ் புகார் அறைக்கு ஒரு அழைப்பு வருகிறது. ‘கத்தி முனையில் எங்கள் வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது’ எனச் சொல்லி வந்த அந்த அழைப்பு துண்டிப்பதற்குள் மேலும் சில அவசர அழைப்புகள் அதே புகார், ‘இரு முகமூடிக் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து எங்களை மிரட்டி பணம், நகை அனைத்தையையும் கொள்ளையடித்துவிட்டனர்’. அந்த ஏரியா காவல் அதிகாரிகளுக்கு தகவல் பறக்க அனைவரும் களத்தில் இறங்குகின்றனர்.

ஆனால் அதற்குள் திருடர்கள் சுமார் 49 வீடுகளில் கைவரிசையக் காட்டித் தப்பிச் செல்கிறார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு துணை ஆணையர் காயத்ரியிடம்(ஷ்ரதா ஸ்ரீநாத்) வருகிறது. விசாரணையில் 49 அல்ல 50 வீடுகள் அதில் ஒன்று தன் முன்னால் காதலன் சந்துருவின்(விஷால்) வீடும் அடக்கம் எனத் தெரியவருகிறது.

மேலும் சந்துருவின் அப்பா முன்னால் ராணுவ அதிகாரியாக பணி செய்து அஷோக சக்ரா விருது வாங்கியவர். அவரைத் தொடர்ந்து அவரது மகன் சந்துருவும் ராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். மேலும் தன் தந்தையின் அசோக சக்ரா விருதை உயிரினும் மேலாக பாதுகாத்து வருகிறார். அதுவும் நடந்தத் திருட்டில் காணாமல் போக காயத்ரி மற்றும் குழுவுடன் சந்துருவும் இணைந்துகொள்கிறார். திருடர்களை பிடிக்க மொத்த போலீஸ் குழுவும் உடன் சந்துருவும் இறங்கி ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். முடிவு என்ன என்பது மீதிக் கதை.

எந்த மாஸ் மசாலா அறிமுக பாடல்களோ , பஞ்ச் டயலாக்குகளோ இல்லாமல் என்ட்ரி கொடுக்கும் விஷால் படம் முழுக்க அந்த கெத்தையும் விடாமல் மெயின்டெயிண்ட் செய்திருக்கிறார். ராணுவ அதிகாரிக்கான மிடுக்கிலும் மிளிர்கிறார். மேலும் படத்தில் காதல் செய்வதற்கான காட்சிகள் வைக்கக் கூடிய இடங்கள் நிறைய இருப்பினும் ரொமான்ஸ் என இல்லாமல் கதைக்கு அதீத முக்கியத் துவம் கொடுத்தமைக்கு பாராட்டுகள். ஷ்ரதா ஸ்ரீநாத் போலீஸ் கெட்டப்பில், ஆக்‌ஷன் அதிரடி என கலக்கியிருக்கிறார். வழக்கமான நாயகி நானல்ல என படத்திற்கு படம் வித்யாசம் காட்டும் ஷ்ரதா இந்தப் படத்திலும் அதை கடைபிடித்திருக்கிறார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ரெஜினா அவரது பாத்திரம் நிச்சயம் பலரையும் ஈர்க்கும். மேலும் அவரது ஸ்டைல், ஆக்‌ஷன் என புது ரெஜினாவை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

ரோபோ சங்கர் காமெடிக்கும் மட்டுமின்றி கதைக்கும் கொஞ்சம் பயன்பட்டிருக்கிறார். படத்தின் ஆச்சர்யமான இடைவேளை, விறுவிறு திரைக்கதை, திருடர்களின்  நவீன திட்டங்கள் என இயக்குநர் நல்ல திரில்லர் பேக்கேஜாகக் கொடுத்திருக்கிறார். மேலும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஹீரோயிஸமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கிறது. சில இடங்களில் லாஜிக்தான் சற்று தொங்குகிறது. குறிப்பாக ஒரு ராணுவ அதிகாரி காவல் துறை விசாரணையில் இவ்வளவு நுழைய முடியுமா. மேலும் காவல் துறைக்கே உத்தரவிட்டு செயல்படுத்த முடியுமா? அடுத்து இது ஒரு க்ளூவிற்கான காட்சி என நாமே கணிக்கும்படி அடுத்தடுத்த கண்டிபிடிப்புகளுக்கு, க்ளூவிற்கெல்லாம் காட்சி நுழைப்பு கொஞ்சம் ஓவர் டோஸ்.

ஒரு தனியார் ஆன்லைன் சேவை மையம் அதன் மூலம் திருட்டு, ஹேக்கிங் என நவீன முறையில் யோசிக்கும் திருடர்கள் ஏன் அப்பட்டமாக கையைத் தூக்கி மாட்டிக் கொள்கின்றனர். இதில் புறாக்களுக்கு சி.சி.டிவி கேமரா எவைப்பதெல்லாம் சமூகம் பெரிய இடமோ தருணம்.  திருடும் போது கூட சின்னக் காயம் ஏற்படுத்தாமல் திருடும் வில்லன்கள் குழு அப்பாவி நண்பரின் அம்மாவை தேவையே இல்லாமல் கொலை செய்வது ஏன் என்னும் கேள்வி எழுப்புகிறது. இதில் விஷால் வில்லன் கூடவே பயணித்தும் பிடிக்காமல் பஞ்ச் சொல்லி கிளம்பும் போது அட போங்கயா என்றே தோன்றுகிறது.

ஆனால் கிடைத்ததோ ‘சக்ரா’. ‘இரும்புத்திரை’ நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்னைகளையும், ஆபத்துகளையும் விபரமாக பேசி அதில் ஹீரோவே ஒருவராக மாட்டி திண்டாடுவதைக் காட்டியதாலேயே படம் வெகுஜன மக்கள் மத்தியில் சென்றடைந்தது. இந்தப் படம் வெகுஜன பார்வைக்கு இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் , திருப்பங்கள் பாமரனுக்குப் புரியுமா என்னும் கேள்விகள் கூட எழுகின்றன.

இதில் பாகம் 2க்கான அடித்தளம் வேறு, இதெல்லாம் பாவம் மை சன்? ஆக்‌ஷன், திரில்லருக்கு அதிரடி சேர்த்திருக்கிறது கே.டி.பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு. யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு யுவன் கைதான் ஓங்கி நிற்கிறது. மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் ‘சக்ரா’ ஆக்‌ஷன் அதிரடி திரில்லராக நம்மை திருப்திபடுத்தும்.ஒரு வருடம் கழித்து வெளியான ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் மாஸ் படம். ஓரளவு நம்மை ஏமாற்றாமல் சீட்டில் உட்கார வைத்திருக்கிறது.

Latest Posts

“அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவனுக்கு பட்டம் சூட்டிய அண்ணாமலை!

கீதா ஜீவனை பார்த்து நான் என்ன கேட்கிறேன் என்றால் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் கூட அழுகிய முட்டை குழந்தைகளுக்கு போடப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை.

திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்திற்கு தங்கத்தகடு: ஸ்டாலின் மனைவி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் பணியை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அண்ணாமலையின் இண்டெலிஜென்ஸ்.. கடுப்பான ஸ்டாலின்..!

தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை...

நொடி பொழுதில் மகளை காப்பாற்றிய தந்தை!!!

தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை. இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்...

Don't Miss

பா.ஜ.க இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது : தமிழக சட்டமன்ற தேர்தல்

சென்னைஅ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க. 20 தொகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. ஏற்கெனவே 17 தொகுதிகளின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இன்று மீதமுள்ள 3 தொகுதிகளின் இரண்டாம்...

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க என் கடைசி உயிர் மூச்சு உள்ளவரை போராடுவேன் : வசீம் ரிஸ்வி

புதுடெல்லிவசீம் ரிஸ்வி   சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை...

தனது நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் தான் சீனா வர விசா வழங்கப்படும் : சீனா அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட 4 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சீன தடுப்பூசிகளை துருக்கி, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாங்கி உள்ளன. இந்நிலையில், தற்போது கொரோனா...

26-ந்தேதி வங்காளதேச பயணத்தின்போது பிரதமர் மோடி 2 இந்து கோவில்களுக்கு செல்கிறார்

டாக்கா, வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவும், வங்காளதேசத்தை நிறுவிய ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமல் எந்த கூட்டங்களும் நடத்த கூடாது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு...