ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் 25வது படமாக நோ டைம் டு டை படம் உருவாகி உள்ளது. இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வர வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான டெனேட் ஹாலிவுட் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் நோ டைம் டு டை படத்தை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். இதற்கு முன் இவர், கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்டர் ஆகிய 4 படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் வேடம் ஏற்றிருந்தார்.
இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கவில்லை. ஜேம்ஸ்பாண்ட் பட சீரிஸிலிருந்து ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் வெளியேறுகிறார்.
அவருக்கு பதிலாக மேட் மேக்ஸ், வாரியர், வெனம் ஹாலிவுட் படங்களில் நடித்த டாம் ஹார்டி, ஜேம்ஸ் பாண்ட் வேடத்தை ஏற்பார் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பரில் வெளியிடப்படும் என தெரிகிறது.