மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது டிவிட் செய்துள்ளார்.
“எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என அமித்ஷா இந்தியில் டிவிட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி தென்பட்டதை அடுத்து சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.