செய்திகள் • October 21, 2018
ஆசிஃப் பிரியாணி ஓட்டல் அழைத்த செய்தியாளர் சந்திப்பில் கொடுக்கப்பட்ட பிரியாணியில் புழு
ஆசிஃப் பிரியாணி ஓட்டல் நிர்வாகம் அழைத்த செய்தியாளர் சந்திப்பின் போது வழங்கப்பட்ட பிரியாணியில் புழு செய்தியாளர்கள் அதிர்ச்சி.
உணவுப் பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றவில்லை என்று கடந்த 3 ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி தயாரிக்கும் குடோனுக்கு சீல் வைத்து மூடப்பட்டது.
உணவுப்பாதுகாப்புத்துறை புகார் சொன்ன புகைப்போக்கிகள் அமைத்தல், உணவு மற்றும் பணியாளர்கள் தூய்மை, மற்றும் 8 வகையான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, சீல் நீக்கப்பட்டுவிட்டதாக ஓட்டல் உரிமையாளர் ஆசிஃப் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்த பின்பு வழங்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததை அடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் அதைப் படம் பிடித்தனர். இதையடுத்து, உரிமையாளர் ஆசிஃப், அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் விளக்கமளித்த ஆசிஃப் பிரியாணி நிர்வாகி பாசித், தங்களுக்கு எதிராக யாரோ வேண்டுமென்றே சதி செய்வது போல் உள்ளது என்று கூறினார்.
Open full site