செய்திகள் • October 23, 2018

பாரதத்திற்கு சென்னை அளிக்கும் பரிசு!!!அசத்தல் இரயில்!!!

மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் , அட்டகாசமான மற்றும் வசதியான இருக்கைகளை கொண்டது , துர்நாற்றம் அடிக்காத கழிவறைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது, உங்களுக்கு பிடித்த படங்களை பார்த்துக்கொண்டே செல்லும் வசதியுடன், கடந்து செல்லும் இயற்கையை ரசிக்க முழுநீள கண்ணாடி ஜன்னல்கள், தானியங்கி கதவுகள் , ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்காக சக்கர நாற்காலி என்று இதுவரை மக்களின் கனவில் மட்டுமே இருந்த ஒரு ரயிலை சென்னையின் ICF நிறுவனம் தயாரித்து பாரத ரயில்வேதுறைக்கு அளிக்க உள்ளது. குழந்தைகள் அல்லாமல் பெரியவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் பயணம் என்றால் அது ரயில் பயணம் தான். ஆனால் கடந்த பல வருடங்களாக எந்த வித முன்னேற்றம் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியத்தால் பல குறைபாடுகளுடன் ஓடிக்கொண்டிருந்தது ரயில்வேத்துறை. அதிலும் நாற்றமெடுக்கும் கழிவறைகள் என்பது ரயில் பயணத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு விடிவாக வந்துள்ளது இந்த Train-18. தற்போது இருக்கும் சதாப்தி ரயிகளுக்கு பதிலாக இந்த ரயிகள் இயக்கப்படும். இதன் சிறப்பம்சங்களை காணலாம்     பயணிகளுக்கான வசதி 1. தானியங்கி கதவுகள் 2. விமானத்தில் இருப்பது போல் துர்நாற்றமில்லா கழிவறைகள் 3. வசதியான இருக்கைகள் 4. சக பயணிகளுக்கு தொந்தரவில்லாமல் உங்களுக்கு மட்டும் ஒளிரும் விளக்கு 5. Wifi இணையதள வசதி 6. ரயில் தற்போது செல்லும் இடம் மற்றும் வேகம் போன்ற தகவல்கள் 7. ஊனமுற்றோருக்கான சக்கர நாற்காலி 8. அவசர உதவி அழைப்பு வசதி 9. இயற்கையை கண்டுகளிக்க முழுநீள கண்ணாடியால் ஆனா ஜன்னல் 10. முழுவதும் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் 11. சிசிடிவி கேமரா தொழிநுட்ப முன்னேற்றம் 1. காற்றின் எதிர்விசையை குறைக்கும் வகையில் வடிவமைப்பு 2. மணிக்கு 160 கிமீ வேகம் 3. முன்னேசெல்லும் உந்து விசை ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் உள்ளதால் இழுத்துச்செல்ல என்ஜின் தேவையில்லை. [embed]https://www.youtube.com/watch?v=TRXEf9xIwmY[/embed]

Open full site