மம்தா பானர்ஜி செல்லும் வழியில்: ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்ட இளைஞர்களை கைது செய்த காவல்துறை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கோபம் தலைக்கு ஏறுவது வழக்கமான ஒன்றுதான்.
சனிக்கிழமை அன்று தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது சில இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டனர். அதனை கேட்ட மம்தா கடும் கோபம் கொண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதும் அந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஏன் ஓடுறீங்க.. இங்கு வந்து பாருங்க என்று மிரட்டும் தொணியில் சத்தம் போட்டார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்ட 3 இளைஞர்கள் கைது செய்த போலீசார் , உரிய கவனிப்புக்கு பிறகு விடுவிக்கப்பட்டு உள்ளனர்.