செய்திகள் • February 08, 2026

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு வருமான உயர்வு தரும்: பியுஷ் கோயல்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சந்தைகள் இந்திய வேளாண் மற்றும் மீன் பொருட்களுக்கு அதிக மதிப்பையும், கூடுதல் வருமானத்தையும் வழங்கும் என அவர் கூறினார். தற்போது இந்தியா 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வேளாண் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
வரும் ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய இறக்குமதி 2 டிரில்லியன் டாலராக உயரும் நிலையில், அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் எனவும், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமானதாகவும் அவர் விளக்கினார்.

Open full site