செய்திகள் • March 08, 2026

இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பைனல்: வரலாறு படைக்க இந்தியா தயாரா?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறும் பைனல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி பைனலுக்கு வந்துள்ளது. தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ரன் குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே போன்ற வீரர்கள் அதிரடியாக ரன் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்துள்ளனர்.

பந்து வீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுத்து வருகின்றனர். மேலும் அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி போன்றோர் அணிக்கு வலிமை சேர்க்கின்றனர்.

மறுபுறம் நியூசிலாந்து அணியும் மிகவும் வலுவாக உள்ளது. ரச்சின் ரவிந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்சல் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் அணியின் முக்கிய வீரர்கள்.

இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை வென்ற முதல் அணியாகவும், தொடர்ச்சியாக இரண்டு முறை டி20 உலகக் கோப்பை வென்ற முதல் அணியாகவும் வரலாறு படைக்கும் வாய்ப்பு உள்ளது.

Open full site