செய்திகள் • October 30, 2018

இந்திய கிரிக்கெட் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும். ரோகித் சர்மா விலாசல்: 137 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 162 ரன்களை எடுத்தார், அதில் 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும் இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 21 வது சதத்தை பதிவு செய்தார். ரோகித் சர்மா புதிய சாதனை: https://twitter.com/ICC/status/1056928337145356290?s=19 ஏழாவது முறையாக 150+ ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார். அம்பாத்தி ராயுடு அபாரம்: 81 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸர்கள் அடித்து தனது ஒருநாள் போட்டியில் 3வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 377 ரன்கள் 5விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 36.2 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் அதிக பட்சமாக ஜேசன் ஹோல்டர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 54 ரன்களை எடுத்தார். 224 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலயவெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்றும், ஒரு போட்டி சமநிலையில் முடிந்ததால், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பின்தங்கியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 1-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறும்.

Open full site