மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10 மணி முதல் தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில், மும்பை மாநகராட்சியில் பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மஹாயுதி கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது. உத்தவ் – ராஜ் தாக்கரே கூட்டணி 51 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அதேபோல் அகோலா, புனே, நந்தீத் மாநகராட்சிகளிலும் பாஜ தலைமையிலான கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தம் 227 வார்டுகள் கொண்ட மும்பை மாநகராட்சியில், மஹாயுதி கூட்டணி 138 வார்டுகளை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சி இந்த முறை புதிய அரசியல் மாற்றத்தை சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.