
பணமில்லா வர்த்தகத்தை பாமரர்களும் உபயோகிக்கும் வண்ணம் எளிய செயலியை அறிமுகப்படுத்தி வெற்றிபெற்ற நிறுவனம் PAYTM. இதன் செயலியை அபயோகிக்காதவர்கள் மிகவும் குறைவு.
இதன் நிறுவனரை 20 கோடி கேட்டு மிரட்டிய சோனியா, அவரது கணவர் மற்றும் சிலர் அதிரடியாக டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
PAYTM நிறுவனர் விஜய் சேகரிடம் கடந்த 10 வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சோனியா தவான். இவர் விஜய் சேகரின் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்களை திருடி வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக 20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.
விஜய் சேகரின் புகாரின் பேரில் துப்பறிந்து டெல்லி போலீஸ் சோனியா தவான், அவரது கணவர், PAYTMல் பணிபுரியும் இருவர் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளது