செய்திகள் • July 28, 2018
பெற்றோரை தவிக்க விட்டால் சம்பளம் கட்!!! அசாம் அரசின் அதிரடி
பெற்றோரையோ அல்லது ஊனமுற்ற சகோதரரையோ சகோதரியையோ நிராதரவாக தவிக்க விடும் அரசு ஊழியரா நீங்கள். அப்படியென்றால் 10 முதல் 15 சதவிகிதம் வரை உங்களின் சம்பளம் குறைக்கப்படும்.
எங்கே இது?
பாஜக தலைமையிலான அசாம் அரசு கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம் இது . அசாம் நிதித்துறை அமைச்சர் திரு.ஹிமந்தா பிஸ்வா சர்மா இதை அறிவித்துள்ளார்.
யாருக்கு பொருந்தும்?
அசாம் அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.
இந்தியா முழுவதும் இது அறிமுகம் செய்யப்பட வேண்டிய நல்ல சட்டம் என்றே தோன்றுகிறது!!!
Open full site