செய்திகள் • February 07, 2026

சூடானில் துணை ராணுவத்தின் டிரோன் தாக்குதல்: 10 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

சூடானின் வடக்கு கொர்டோபென் மாகாணத்தில், ரஹாட் பகுதியில் பயணித்த வாகனத்தை குறிவைத்து துணை ராணுவமான அதிவிரைவு ஆதரவு படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள், 8 சிறுவர்கள் உள்பட 24 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
2021ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சியில் இருக்கும் சூடானில், ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

Open full site