தாய்க்கு தலைமகன்
தந்தைக்கு இளைய மகன்
என்றுதான் சொல்லுவார்கள்
என் தகப்பன்
பாரதத் தாய்க்கு தலைமகன் …
நான் கருவறையில்
இருக்கும் போது
என் தகப்பன்
எல்லையில் இருந்தான்,
நான் கர்ப்பப்பை
விட்டு வந்து விழுந்ததும்
இப்படிப் பார்க்கும்போது
பாவியானேன்.
என் தகப்பனை பார்க்காத பாவியானேன்……..
நான் விளையாட
பொம்மை வாங்கி வருவான்
என்று இருந்தேன்.
ஆனால்
அவனே பொம்மையாக வந்தானே
இறப்பிலும் மகனை மகிழ்விக்க பொம்மையாக நடித்தானோ
என் தகப்பன்?
உயிரோடு இருந்து
கண்ணாமூச்சி
ஆட வேண்டியவன்
இறந்தும்
கண்ணாமூச்சி
ஆடுகிறானோ
எனக்கு பேச முடியாது
கடவுளைப் போல
மௌன சாட்சியாய்
அனைத்தையும் காண்கிறேன்
என் தகப்பன் சாகவில்லை
என் தகப்பன் விட்டுச்சென்ற
பணிக்காக
நானும் செல்வேன்
எல்லையை காப்பேன்
என் தகப்பன்
சாகவில்லை
அந்த
எல்லை சாமியின்
ஆசீர்வாதம்….
இன்றும் , என்றும்
எனக்கு உண்டு
என்போன்ற
எல்லை சாமிகளின்
வாரிசுகளுக்கும் உண்டு
இராம. இரவிக்குமார்
86430_81430