செய்திகள் •
21 Jun 2019
கூகுள் மேப்பில் தெரியும் வீர சிவாஜியின் உருவம்
நிலங்கா எனும் கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாக வரைய திட்டமிடப்பட்டது. இதனையடுத்து இக்கிராமத்தில் 2.4 லட்சம் சதுர அடி அளவில் 6 ஏக்கர் பரப்பளவில் ரங்கோலி போட ஏற்பாடு செய்யப்பட்டது.
வீர சிவாஜியின் கூகுள் மேப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த ரங்கோலியினை கலைஞர் மங்கேஷ் நிபானிகர் என்பவர் வரைந்திருந்தார். பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த ரங்கோலி கோலமானது , 3 மாதங்கள் கடந்தும், இப்போது தேடினாலும் கூகுள் மேப்பில் பிரம்மாண்டமாக தெரிகிறது.
இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. மேலும் கூகுளின் சாட்டிலைட் வியூவிற்கு இதனை மாற்றி ‘சத்ரபதி சிவாஜி மகராஜ் கிராஸ் போட்டோ பார்ம்’ என டைப் செய்தால் இந்த ரங்கோலி அச்சு அசலாக அப்படியே தெரிகிறது.
- நமது நிருபர் -
⬅ முந்தைய