தொழில்நுட்பம் — Nov 22, 2025
BSNL.. கப் சிப்னு ரீசார்ஜ்.. ரூ.225 போதும்.. 30 நாட்களுக்கு வாய்ஸ்.. 2.5 ஜிபி டேட்டா.. குஷியில் கஸ்டமர்கள்!
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான விலைக்கு ரூ.225 விலை கொண்ட திட்டம் கிடைக்கிறது. தினசரி டேட்டா அதிகமாக கிடைப்பதால் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது சில்வர் ஜூபிலி சலுகையில் கிடைப்பதால், இப்படி அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து, பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இலவச சிம் கார்டு முதல் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை கொடுப்பது வரையில் கிடைத்தது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டம் பெற்ற வரவேற்பை போல மற்ற திட்டங்கள் பெறவில்லை. ஏனென்றால், இதில் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அதேபோல இந்த திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் பிரத்யேகமாக கிடைக்கின்றன. ஆகவே, கிட்டத்தட்ட இதே விலைக்கு கிடைக்கும் மற்ற திட்டங்களில் சலுகைகள் குறைவாக இருக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு அதிக டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், இதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இது புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், பழைய கஸ்டமர்களுக்கும் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 Prepaid Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். இதில் லம்ப்-சம் டேட்டா, லம்ப்-சம் எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்காது. தினசரிக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா தொடர்ந்து கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், அந்த வேகத்திலேயே 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 30 நாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் வருகிறது.