செய்திகள் •
16 Jul 2018
அப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை.. ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் உருக்கம்
அப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை- வீடியோ
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது. முகுத் பிகாரி மீனாவின் 5 மாத குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. குப்வாரா தொடர்ந்து திடீரென்று இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.
பரிதாப பலி இந்த நிலையில் கடந்த வாரம் குப்வாரா காட்டிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ராஜஸ்தானின் ஜாலாவர் கிரமாத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா பரிதாபமாக பலியானார். அதேபோல் இரண்டு தீவிரவாதிகள் இதில் படுகாயம் அடைந்தனர்.
இறுதி சடங்கு நடத்தினார்கள் அவரது உடலுக்கு சொந்த கிராமத்தில் இருந்து சடங்கு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. 5 மாத குழந்தை ஒன்றும் இருக்கிறது.
- நமது நிருபர் -
⬅ முந்தைய