பட்டியல் இனத்தினரை இழிவான பேசிய கீதா ஜீவன். தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக திருப்பம். கலக்கத்தில் திமுக!
தூத்துக்குடயின் கள நிலவரம் பொறுத்தவரை, 15 நாளைக்கு முன்பு இருந்த நிலைமை வேறு, இன்றைக்கு இருக்கக்கூடிய களம் வேறு!
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து மூன்று ஆண்டுக்கு முன்பே கனிமொழி திட்டமிட்டுள்ளார். அதன்படியே காய்களையும் நகர்த்தினார்.
நாடார் இன மக்களை சந்தித்து பேசி வந்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களோடு மக்களாக கரம் கோர்த்து போறாராட்டம் செய்தார். இதனால் தூத்த்துக்குடி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பெரும் பாடு பட்டார். ஆனால் எல்லாமே ஒரே ஒரு ஆடியோவால் நொறுங்கி போனது. எல்லாம் எம்.எல்.ஏ., கீதாஜீவன் பேசிய ஒரே ஒரு ஆடியோ தூத்துக்குடி மக்களின் மனதிலிருந்து தி.மு.க வை தூக்கி எரிய வைத்துள்ளது.
மதுரையை சார்ந்த சைவ வேளாளர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் கீதாஜீவன் பேசும்போது, சைவ வேளாளர்களுக்கு ஆதரவாகவும் பட்டியல் இன மக்களுக்கு எதிராகவும் கீதாஜீவன் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதாவது வேளாளர் என்ற பட்டம் பிற சாதியினருக்குக் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டுமானால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம் மற்றும் நகரம், கிராமங்களில் உள்ள ஏராளமான சங்க அமைப்புகளின் பெயரில் மனுக்களை எழுதி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்புமாறு கீதாஜீவன் யோசனை கொடுக்கிறார். மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்களுக்கும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் மனு கொடுக்குமாறும் கீதா ஜீவன் அறிவுரை வழங்குகிறார்.
இப்படி ஒருதலைபட்சமாக கீதா ஜீவன் பேசிய அந்த பேச்சு பட்டியல் இனத்தை சார்ந்த மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பி விட்டது, பட்டியல் இன மக்களை இது போன்று கீதாஜீவன் பேசிய பேச்சு தூத்துக்குடி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க வின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் கீதாஜீவனை நுழைய விடமாட்டோம் திமுக கட்சிகளுக்கு ஒட்டு போடவும் மாட்டோம் என்று சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
அன்று கீதா ஜீவன் பேசிய அந்த பேச்சு அத்தனையும் இன்றைக்கு கனிமொழி மற்றும் தி.மு.க விற்கு எதிராக எதிராக திரும்பி இருக்கிறதாம். ஏற்கனவே வரும் தேர்தலில் தலித் தொகுதிகளில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற கருத்து எழுந்துள்ள நிலையில், தூத்துக்குடி திமுகவின் தேவேந்திர குல வேளாளர் தொண்டர்களிடம் இது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
பலவீனம் கனிமொழிக்கு எதிரான நிலைப்பாடு என்றால், அது கண்டிப்பாக தமிழிசை சவுந்தராஜனுக்கோ அல்லது டிடிவி தினகரனுக்கோ தான் சாதகமாக அமையும் சூழல் உள்ளது. இதில் அதிக படியான வாய்ப்பு தமிழிசை சவுந்தராஜனுக்கே இருக்கும் என்று பலரது கருத்துக்களாக உள்ளது.