மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு கோவில் கட்ட பிரதமர் மோடிக்கு இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம்
அருகில் இருக்கக்கூடிய உடையாளூர் என்கின்ற ஊரில் மாமன்னன்
ராஜராஜ சோழன் பள்ளிப்படை நினைவிடம் இருப்பதை அறிந்து இந்து தமிழர் கட்சியின் சார்பில் அனைத்து சிவனடியார்கள் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இன்று 21 6 2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாமன்னர்
ராஜராஜ சோழனுடைய சிவலிங்கத் திருமேனிக்கு பால் ,பன்னீர், திருமஞ்சனம், சந்தனம், தயிர், பச்சரிசி மாவு, வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மாலை அணிவித்து , உதிரிப்பூக்கள் கொண்டு உறுதிமொழி
எடுத்து மனநிறைவான சிவபுராண
பாராயண தோடு இன்றைய நிகழ்வு அமைந்தது .
மாமன்னர் ராஜராஜனுடைய நினைவு
சிவலிங்கம் இருக்கக்கூடிய இடத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருக்கோயில் கட்டுவதற்குரிய ஏற்பாட்டினை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
பாரத பிரதமர் மாண்புமிகு
நரேந்திர மோடி அவர்கள் இந்த ராஜராஜனின் நினைவிடத்திற்கு வருகை தந்து இவருடைய அருளாசி பெற வேண்டும்.
மராட்டிய மாவீரன் வீர சிவாஜியை கௌரவித்தது போல இந்த உடையாளூரில் மிகப்பெரிய ராஜராஜசோழன் திருக்கோயில் கட்ட வேண்டிய உதவிகளை செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டி இந்திய மாநில அரசுகளின் வலியுறுத்துவது என உறுதிமொழிஎடுத்துக் கொண்டோம்..
மேலும்
ஒவ்வொரு மாதமும் ராஜராஜனின் சதய நட்சத்திர தினத்தன்று சிவனடியார்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒருங்கிணைத்து திருமுறைகள் பாராயணம் செய்வது,
வழிபாடு செய்வது, கூட்டுப் பிரார்த்தனை செய்வது, என்று இன்று தீர்மானிக்கப்பட்டது .
மாமன்னர் ராஜராஜ சோழனின்
பெருமைகளை பறைசாற்றும் விதமாக
செப்டம்பர் மாதம் பிரச்சார இயக்கத்தை தமிழகத்தில் தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மாமன்னன்
ராஜராஜ சோழன் குறித்து தவறான அவதூறு பரப்பும் கருத்துக்களை திரைப்பட இயக்குனர் ரஞ்சித் நிறுத்திக்கொள்ள வேண்டும்.மன்னிப்பு
கேட்க வேண்டும். இந்து மதத்தை விமர்சனம் செய்து பேசினால்
தமிழகத்தில் தலைவன் ஆகி விடலாம் என்ற மலிவுவிலை அரசியலை மேற்கொள்ளக்கூடிய அனைவருக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தோம். இதுபோன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களுக்கு நினைவிடம் கட்ட 20 கோடி 50 கோடி என ஒதுக்கக்கூடிய அரசாங்கம், தமிழ் சமுதாயத்தினுடைய அடையாளமாக இருக்க கூடிய மாமன்னர் ராஜ ராஜனுக்கு திருக்கோயில் கட்டாதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உடையாளூர் ராஜராஜசோழன் நினைவிடத்தை உலகறியச் செய்ய உறுதியேற்ற அனைத்து சிவனடியார்களின் எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல சிவபெருமானை , மாமன்னர்
ராஜராஜ சோழனும் மனதார எங்களை வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனையோடு , மனநிறைவோடு இன்று உடையாளூரில் இருந்து திரும்பினோம்.
திருவாசக முற்றோதல் நடத்தக்கூடிய சிவநெறியை பரப்பக்கூடிய சிவநெறி தொண்டர்கள் ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திர தினத்தன்று உடையாளூரில் ஒன்றிணைவோம்.
மாமன்னன்
ராஜராஜ சோழனுக்கு பெரிய அளவில் திருக்கோயில் கட்ட எண்ணத்தால் வழிபாடு செய்து எடுத்த காரியம் வெற்றி பெற அனைவரும் வேலை செய்வோம்.
இன்றைய வழிபாட்டு பூசை நிகழ்வுகளுகுரிய கூறிய அனைத்து ஏற்பாடுகளையும் இந்து தமிழர் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை திரு சன் சிவா
செய்திருந்தார்.
உடன் மாவட்ட அமைப்பாளர்
திரு பால குமார்,
கும்பகோணம்
இந்து இயக்க மூத்த பிரமுகர் திரு பாலு அவர்கள்,
பட்டுக்கோட்டை
ஜி வெங்கடேஷ் அவர்கள்
திரு செந்தில்குமார் ஆலங்குடியை சார்ந்த சிவனடியார்கள் இறைநெறி தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இராம இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி
86430-81430