விளையாட்டு •
31 Dec 2025
இந்தியா vs இலங்கை மகளிர் 5வது டி-20: 15 ரன்னில் வெற்றி, தொடரை 5-0 என கைப்பற்றிய இந்தியா
திருவனந்தபுரம் கிரீன்பீல்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மகளிர் டி-20 போட்டியில் இந்திய பெண்கள் அணி, இலங்கையை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியான அரைசதம் மூலம் அணியை மீட்டார். இறுதியில் இந்தியா 175 ரன் எடுத்தது. இலங்கை அணியில் ஹாசினி, இமேஷா ஆகியோர் போராடினாலும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 160 ரன்னில் தோல்வியடைந்தது.
இந்த தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் தெளிவாக வெளிப்பட்டது. மேலும், இப்போட்டியின் மூலம் விக்கெட் கீப்பர் கமலினி தனது சர்வதேச டி-20 அறிமுகத்தை பதிவு செய்தார்.
- நமது நிருபர் -
⬅ முந்தைய