செய்திகள் •
15 Nov 2018
சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் பற்றி தவறாக கூறிய ராகுல்காந்தி
சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கர் பற்றி தவறான தகவல்களை கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர் மீது மும்பை சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது .
சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கரின் வம்சாவளியை சேர்ந்த ரண்ஜீத் சாவர்க்கர் புகார் கொடுத்துள்ளார்:
அந்தமான் சிறையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரிட்டிஷாருக்கு வீர்சாவர்க்கர் கெஞ்சி மன்னிப்பு கடிதம் எழுதியதாக ராகுல்காந்தி கூறியது. இது மிகவும் தவறான தகவல் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் மன்னிப்பு கேட்கிறேன், எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன், சிறையில் இருந்து விடுதலை செய்யுங்கள், கைகளை வைத்து, நான் உங்கள் (பிரிட்டிஷ்) கால்களைத் தொடுவேன், சிறையில் இருந்து என்னை விடுதலை செய்யுங்கள்" என்று கெஞ்சியதாக ராகுல் காந்தி பேசியது அவரை அவமான படுத்தும் விதமாக உள்ளது. பிரிட்டிஷாரால் சாவர்க்கர் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அவரது புகழுக்கு களங்கம் வகையில் தேர்தல் பேரணியில் பேசியதால் ராகுல்காந்தி மீது புகார் கொடுத்திருப்பதாகவும் ரண்ஜீத் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.Rahul Gandhi in an election rally y'day alleged Veer Savarkar had apologised to the Britishers to be released from jail. It's false.Savarkar ji was jailed for 27yrs by Britishers.I've filed a complaint against him for defaming Savarkar ji: R Savarkar, Grandnephew of #VeerSavarkar pic.twitter.com/dzhvkZwsHC
— ANI (@ANI) November 15, 2018