Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 09 Mar 2019

சர்ச், மசூதிகளில் இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் நிறுத்தவில்லை எனில் தாமரைக்கு ஆதரவாக கோவில்களில் பிரச்சாரம் செய்வோம் – கிராம கோவில் பூசாரிகள் சங்கம் அறிவிப்பு

Source:tnnews24.com

சர்ச் மசூதிகளில் இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் நிறுத்தவில்லை எனில் தாமரைக்கு ஆதரவாக கோவில்களில் பிரச்சாரம் செய்வோம் – கிராம கோவில் பூசாரிகள் சங்கம் அறிவிப்பு.

தென்காசி

காசிவிஸ்வநாதர் கோவில் புனரமைப்பு மற்றும் 12 -ம் ஆண்டு கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் கூட்டம் தென்காசி ராச முத்தப்பா மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கோவில் பணத்தை அரசு எடுத்துக்கொண்டு குறைவான சம்பளத்தையே பூசாரிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாகவும் இமாம்களுக்கு மாத ஊதியத்தை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதுபோல் எங்களுக்கும் வழங்கவேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

அரசாங்கம் மற்றும் காவல் துறையினர் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முறையாக அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாடினார்.

மாத ஊதியம் 10 ஆயிரத்திற்கு குறைவான ஊதியம் பெரும் அர்ச்சர்கள் குடும்பத்திற்கு கல்வி மற்றும் மருத்துவத்தில் சலுகை அளிக்கவேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

மேலும் தினபடியை உயர்த்துவது கோவில் நிலங்களை அரசு முறையாக பயன்படுத்துவது உட்பட 16 கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் கடைசியாக வழிபாட்டு தளங்கள் அனைத்தும் அரசியலுக்கோ மத பிரச்சாரத்திற்கோ அப்பாற்ப்பட்டு இருக்கவேண்டும்.

ஆனால் இங்கு அனைத்து சிறுபான்மை கூடங்களில் பெரும்பான்மை இடங்களில் இந்து மதம் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்ய படுகிறது மேலும் இந்து அமைப்புகள் குறித்தும் அவதூறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் நாங்கள் எங்கள் கோவில்களில் இந்து அமைப்பிற்கோ அல்லது குறிப்பிட்ட தாமரை கட்சிக்கோ வாக்குகளை சேகரிக்க தயங்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

கோவில் பூசாரிகள் முதல்முறையாக பிரச்சாரம் குறித்து பேசி இருப்பதும் அவர்கள் அதுபோல் செயல்பட்டால் நிச்சயம் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே நம்ப படுகிறது.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் ராமநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் என 700 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதியில் ஒருமணிநேர அடையாள ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு தங்கள் கோரிக்கையை தெளிவுப்படுத்தினர்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்