தந்தை என்பவன் உயிர் கொடுப்பவன் மட்டுமல்ல உயிர் காப்பவனும் கூட… நொடி பொழுதில் சூப்பர் மேனாக மாறி மகளை காப்பாற்றிய தந்தை.
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் திறந்து கிடந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் தவறி விழுந்த குழந்தையை, தந்தையின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டாள்.
செங்குந்தர் தெருவில் செல்லும் கழிவு நீர் கால்வாயை தூர்வார நகராட்சி பணியாளர்கள் குழி தோண்டிய நிலையில் தூய்மைப் பணி முடிந்து ஒரு வாரமாகியும் குழியை மூடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2 வயது சிறுமி மித்ரா தன் தந்தை விவேக்குடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நிலையில் குழந்தை மித்ராவை இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிவிடும் போது திடீரென குழியில் கால் தவறி விழுகிறது. உடனே நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்ற கழிவுநீர் செல்லும் கால்வாயில் குதித்து குழந்தையை காப்பாற்றுகிறார் தந்தை.