சென்னை: நங்கநல்லூர் மார்டன் பள்ளி அருகே சுவரில் எழுதும் அரசியல் விளம்பரத்திற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக மற்றும் பாஜகவினர் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அங்கு உள்ள ஒரு சுவற்றில் ஏற்கனவே திமுக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்த நாளை ஒட்டி அதே சுவற்றில் பாஜக மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு விரைந்து வந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானமாக பேசி கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த திமுக நிர்வாகி ஒருவர் பாஜக மகளிரணி நிறைய தாக்கினார்.