டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., – டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை சார்பில், சோதனைகள் முடுக்கி விடப்படுகின்றன.எந்தவொரு புகாரும் வராத நிலையில், இவ்வாறு சோதனை நடத்துவதன் வாயிலாக, தி.மு.க., வேட்பாளர்கள் மீது களங்கம் விளைவிப்பதோடு, அவர்களது பிரசாரப் பணிகளையும், சில நாட்களாவது முடக்கலாம் என முயற்சி நடந்துள்ளது.
‘தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில், உள் நோக்கத்துடன் கூடிய சோதனைகளை, தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக நடத்துவதை தவிர்க்கும்படி, வருமான வரித் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்’ என, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.