ஜம்மு காஷ்மீர் என்று நான் குறிப்பிட்டது பாகிஸ்தான் , சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் சேர்த்துத்தான். காஷ்மீர் மீட்க என் உயிரையும் கொடுக்க தயார்.
-அமித்ஷா
இதைக் கேட்கும் போது தோன்றியது இதுவே
“இப்படித் துணிவுடன் அன்று நேரு நாட்டுப் பற்றோடு இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாட்டை அவர் அப்பா வீட்டுச் சொத்து போல நினைத்துக் கொண்டு இந்த கிருஷ்ணமேனன் என்ற சீனாவின் அடிமை பேச்சையும் கம்யூனிச சிந்தனையையும் பின்தொடராமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவிற்கும் பிரச்சனைகள் இல்லை , திபத் வாசிகளுக்கும் பிரச்சனை இல்லை. இன்று அந்த தவற்றைத் திருத்துவோம் என்று பேசுவதற்கே பெரும் வீரம் , திராணி வேண்டும். அது இந்த காலகட்டத்தைப் பொறுத்தவரை நாட்டில் அமித்ஷா , நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக அரசுக்கே உள்ளது.
வலிமையான பாரதம் உருவாக்குவோம்… உலகம் முழுவதும் எந்த நாடுகளில் குடியேறினாலும் சொந்த நாடு தான் உன்னை அரவணைக்கும் எனவே உள்ளூர் முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரை அனைவரும் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பாராது, தனிபட்ட காழ்ப்புணர்ச்சிகளை விட்டு – மதம் மொழி இனம் கட்சி சார்புகள் தாண்டி ஒரு தேசத்தின் மக்களாக இந்த ஆட்சியாளர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் அவர் கொண்ட அதே தேசப்பற்றோடு 100% நாமும் துணை நிற்போம்.
தேர்தல் அல்ல இங்கே லட்சியம் – தேசம் காப்பதே கடமை.
நன்றி:-மாரிதாஸ்