புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கியதற்கு என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கதிர்காமம் பகுதிக்கு காரில் வந்த ரங்கசாமியை முற்றுகையிட்டு தொண்டர்கள், நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங். எம்எல்ஏ செல்வத்துக்கே மீண்டும் சீட் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.