விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா(28) ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாக்வும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் ஹேமந்த்துடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவம் சின்னத்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.