இந்திய அணிக்காக இன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தழிழகத்தை சார்ந்த நடராஜன் அவர்களுக்கு தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார் நடராஜன். முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
AUSvsIND கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் @Natarajan_91
அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்!