அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில், பா.ஜ.க மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மிக சிறப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும். மற்ற கட்சிகள் தேர்தல் பணியில் கொஞ்சம் மந்தமாக செயல்படுவதாக, அ.தி.மு.க., தலைமையிடம், உளவுத் துறை தகவல்.
தமிழக லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு, அ.தி.மு.க., அமைத்துள்ள கூட்டணியில், பா.ஜ.க. மற்றும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதி கட்சி – புதிய தமிழகம் என்று ஒரு மெகாகூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஓட்டுப் பதிவுக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ. மற்றும் பா.ம.க. கட்சி தொண்டர்களின் தேர்தல் பணி, திருப்திகரமாக இருப்பதாக, அ.தி.மு.க. தலைமையிடம், உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது .
மேலும் பல இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க.,வுக்கு ஏழு தொகுதிகளும் , பா.ஜ.,வுக்கு ஐந்து தொகுதிகளும், தே.மு.தி.க. வுக்கு நான்கு தொகுதிகளும் வழங்கப்பட்டன. புதிய நீதி கட்சி மற்றும் புதிய தமிழகம், த.மா.கா.,வுக்கு, தலா, ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கிய, அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.