விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழகத்தில் போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் H ராஜா தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விநாயகர் சிலைகள் செய்யும் இடங்கள் சீல் வைக்கப்படுவது, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல தடை போன்ற செயல்களை தமிழக அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.
மேலும் அந்த ட்விட்டர் பதிவில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேக் சேர்த்துள்ளார்.