சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாதால், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணை கோரப்படும் என அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு மீது, கடந்த 2025 அக்டோபர் 27ம் தேதி அமலாக்கத் துறை ஆதாரங்களுடன் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டத்தை மீறும் செயல் என்றும், இது கவலைக்குரியது என்றும் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், இல்லையெனில் துறை இயக்குநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்