அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல முக்கிய பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், விமான பாகங்கள், ஸ்மார்ட் போன்கள் போன்ற தொழில்துறை சார்ந்த பொருட்களுடன், தேநீர், காபி, மசாலா, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கும் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா போன்ற பெரிய சந்தையில் இந்திய பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்