உடனடி செய்தி

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம்: மின்சார இன்டக்ஷன் அடுப்புக்கு அதிகரிக்கும் தேவை

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம்: மின்சார இன்டக்ஷன் அடுப்புக்கு அதிகரிக்கும் தேவை

காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதால், பொதுமக்கள் மின்சார இன்டக்ஷன் அடுப்புகளை அதிகமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்காக தங்கியிருக்கும் இளைஞர்கள், ஹோட்டல்கள் மூடப்பட்டால் உணவிற்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சத்தில் இந்த மின்சார அடுப்புகளை வாங்கி வருகின்றனர்.

சென்னையை உட்பட பல நகரங்களில், டீக்கடை முதல் பெரிய ஹோட்டல்கள் வரை காஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்ற கவலை நிலவி வருகிறது. இதனால் வியாபாரிகளும் முன்னெச்சரிக்கையாக மின்சார அடுப்புகளை வாங்க தொடங்கியுள்ளனர்.

'செப்டோ', 'பிளிங்கிட்', 'இன்ஸ்டாமார்ட்', 'பிக்பாஸ்கெட்' போன்ற ஆன்லைன் டெலிவரி செயலிகளில் கூட மின்சார இன்டக்ஷன் அடுப்புகளுக்கான தேவை அதிகரித்து, பல இடங்களில் 'ஸ்டாக் அவுட்' நிலை ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், முன்பு ஒரு நாளைக்கு ஐந்து மின்சார அடுப்புகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், தற்போது விற்பனை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது. ரூ.1,600 முதல் ரூ.4,500 வரை விலை கொண்ட இந்த மின்சார அடுப்புகளை மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராமேஸ்வரம் கோயில் லட்டு மோசடி ₹3.4 கோடி | 6 பேர் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம் கோயில் லட்டு மோசடி ₹3.4 கோடி | 6 பேர் சஸ்பெண்ட்
3 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. பிளவு தீவிரம்: எம்.எல்.ஏ.க்கள் ‘டிமாண்ட்’ உயர்வு
அ.தி.மு.க. பிளவு தீவிரம்: எம்.எல்.ஏ.க்கள் ‘டிமாண்ட்’ உயர்வு
3 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் ஆலோசனைக்கு பின்: சதீசன் முதல்வர்
காங்கிரஸ் ஆலோசனைக்கு பின்: சதீசன் முதல்வர்
3 மணி நேரங்கள் முன்பு
அமைச்சர் பதவி டீல்: வேலுமணி 8 கோரிக்கை – விஜய் 5க்கு மட்டுமே ஒப்புதல்
அமைச்சர் பதவி டீல்: வேலுமணி 8 கோரிக்கை – விஜய் 5க்கு மட்டுமே ஒப்புதல்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்