திருமணம் நடந்து 15 வது நாளில் பெண்ணுக்கு ஆண்குழந்தை..!
கிருஷ்ணகிரி - ஊத்தங்கரையில், திருமணம் ஆனா 15-வது நாளில் புதுமணப் பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்ட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிகழ்வை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சி.
ஊத்தங்கரை கலைஞர் நகரை சார்ந்த அஜீஸ் என்பவருக்கும், தருமபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் கடந்த 15நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
நேற்றிரவு பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட அவரை அஜீஸ் அரசு மருத்துவமனை க்கு அழைத்து சென்றார். பர்வீன்பானுவை பரிசோதித்த மருத்துவர்கள், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.
திருமணம் நடந்த 15 நாட்களிலையே குழந்தை பிறக்கவுள்ளதாக மருத்துவர்கள் கூறியது , கடும் அதிர்ச்சியடைந்த அஜீஸ் மருத்துவமனையை விட்டு சென்றுவிட்டார். அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் பிறப்பை பதிவு செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டிய சூழலில்,மருத்துவமனையை விட்டு அஜீஸ் சென்றுவிட்டதால், பர்வீன்பானுவின் சொந்தக்காரர்களை வரவைத்து மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தது பற்றி காவல்நிலையத்தில் அஜீஸ் புகார் கொடுக்க உள்ளதாகவும் தகவல்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சர் பதவி சர்ச்சை: CBI விசாரணை எச்சரிக்கும் தினகரன்
13 மணி நேரங்கள் முன்பு
அதிமுக ஒன்றிணைக்க ரஜினி முயற்சி? மூத்த நிர்வாகிகளுடன் நேரடி பேச்சு
13 மணி நேரங்கள் முன்பு
ரங்கசாமி அதிரடி: அதிமுக மூலம் பா.ஜ.க-க்கு ‘செக்’ – பதவி பங்கீடு சர்ச்சை
14 மணி நேரங்கள் முன்பு
உதயநிதிக்கு எதிர்ப்பு: கோவையில் அர்ஜுன் சம்பத் தோப்புக்கரணம் பிரார்த்தனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்