மதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இன்று ரஜினிகாந்த் தனது மனமுருகி பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரமாக குணமடைஞ்சி வீட்டுக்கு வந்துருவீங்க. நீங்க குணமடைஞ்சி வந்த பிறகு Please நீங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வாங்க. உங்கள பாக்குறேன், தைரியமாக இருங்க ஆண்டவனை வேண்டுகிறேன் தைரியமாக இருங்க ,தைரியமாக இருங்க… வாழ்க. இவ்வாறு ரஜினிகாந்த் ஆடியோவில் பேசியுள்ளார்.