தமிழக சட்டமன்றத்தை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாற்றும் பணிகளில் திமுக அரசு இறங்கியுள்ளதாகவும், இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, புதிய சட்டமன்றத்தை அமைக்கும் வேலைகளை துவங்குவது தொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.
கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். இதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. அங்கு ஒரு செங்கல்லை கூட வைக்கவிடமாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அண்ணாமலையின் இந்த வார்னிங்கை முதல்வர் ஸ்டாலின் எந்த அளவுக்கு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை தான் அறிவிக்கும் முன்பே அண்ணாமலைக்கு எப்படி தெரிந்தது என்பதுதான் அவரின் கேள்வியாக இருப்பதாகவும். இதன் விஷயத்தில் அவர் அரசு உயரதிகாரிகள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய சட்டப்பேரவை விஷயத்தில் அண்ணாமலைக்கு தகவல் தந்த கருப்பு ஆடுகள் யார் என்று உடனடியாக கண்டறிய வேண்டும் என்றும், இனியொரு முறை அரசின் கொள்கை முடிவுகள் இனியொரு முறை இப்படி வெளியே கசியக்கூடாது எனவும் அரசு உயரதிகாரிகளிடம் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள கூறியுள்ளன.